பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 17.

தொடங்கும்போது கூச்சலிடுவதும், ஊளையிடுவதும், கொக்க ரிப்பதும், கூத்தடிப்பதுமாக அவர்கள்பொழுதை கழித்தனர். விதிகள் இல்லாத விளையாட்டில் வேதனைதரும் நிகழ்ச்சிகள் நடந்தன என்றால், வியப்பிற்கு இடமேயில்லை அல்லவா!

தங்கள் நகரிலிருந்து எதிர் நகரத்திற்குள் பந்தைச் செலுத்தி விட்டு வெற்றி பெற்ற வீரர்கள். தங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்த, சிறிய சிறிய நகருக்குள்ளே புகுந்து அங்குள்ள வீதிகளில் பந்தை எத்திக் கொண்டு ஒடுவார்கள். அவர்கள் எதிரில் வரும் மனிதர் களுக்கும் எதிர்படும் பொருட்களுக்கும் எந்த நேரத்தில் எந்த விதத்தில் ஆபத்து நேரும் என்பது யாருக்கும் தெரியாது.

கடைக்காரர்களும், வாணிகம் செய்பவர்களும், தங்கள் கடைகளை அடைத்து, மூடிக் கொண்டு, நடுங்கி, ஒடுங்கி, நலிந்து, மெலிந்து அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரும் வரைக்கும் பதுங்கிக் கிடப்பார்கள். அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் என்று நெருங்கிப் போய்ப் பார்த்தால், அந்த இடம் யானைகள் நடந்த நெல் வயலைப் போன்று நாசமாகிக் கிடக்கும். இவ்வாறு அடிக்கடி பாதிக்கப் பட்டவர்களும், பயமுள்ளவர்களும் இந்த பாழ் நிலை போக, ஆட்சிக் குழுவினருக்குத் தைரியமாகச் சென்று தெரிவித்தனர்.

‘கட்டிடங்கள் இடி படுவதும், கடைகள் நாசமாவதும், மக்கள் அவதியுறுவதும் தடுக்கப் பட வேண்டும்’ என்று அரசாங்கம் முடிவெடுத்தது. டேன் தலையை எத்துதல்’ என்னும் ஆட்டத்தை ஆடுவோர் இனி நகரத்திற்குள்ளே வந்து ஆடக் கூடாது. மீறில்ை, இந்த விளையாட்டே ஆட விடாது அழிக்கப்படும். இவ்வாறு கட்டளை பிறந்தது.

விளையாடுகின்ற ஆடுகளம், பரந்து கிடந்த நிலையை விட்டு விட்டு, குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையே வாழத்