பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 179

தள்ளலாம். ஆனால், நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு கால தாமதம் செய்யாமல் இதைச் செய்ய வேண்டும்.

பந்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து, 5 கெசத்திற்கு அப்பால் தான் எல்லா ஆட்டக்காரர்களும் நின்று கொண்டிருக்க வேண்டும்.

யாராவது ஒருவர் 5 கெசத்திற்குள்ளாக நின்று கொண்டிருக்கும் பொழுது, பந்தை உள்ளே தள்ளி விட்டால், மீண்டும் உள்ளே தள்ளி விடும் வாய்ப்பை அவருக்கே தர வேண்டும்.

உள்ளே தள்ளி விடுபவர் தவறு செய்தால், அந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து பந்தை உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பு எதிர்க் குழுவிற்குப் போகும்.

உள்ளே தள்ளி விட்டவரே, மற்ற ஆட்டக்காரர்கள் யாராவது வந்து பந்தை விளையாடுவதற்கு முன், தானே ஆடக்கூடாது.

அந்தத் தவறு நிகழுமானல், எதிர்க் குழுவினருக்கு த் தனி அடி அடித்து ஆட்டத்தைத் தொடங்குகின்ற

வாய்ப்பை நடுவர் வழங்குவார்.

355 fu 119 (Free Hit)

(1) பந்தை அடிக்கத் தொடங்குவதற்கு முன்னும், அல்லது அடித்த பின்னும் ‘கோலை'த் தோள் அளவுக்கு (Shoulder level) மேலே உயர்த்துதல்.

(2) எதிர்க் குழுவினர் அருகில் இருக்கும்பொழுது, பந்தை அபாயகரமான முறையிலே அடித்து ஆடுதல்;