பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

என வழங்கும் முறையில் பின்பற்றப்படும் முறைகள் மூன்று இவைகள் தான்.

இவ்வாறு வழங்கும் நிலையை இரண்டாகப் பிரிக்கலாம். தன்னுடைய குழுவினர் ஒருவருக்கு, பந்தை அவருக்கு நேராகவே கிடைக்கும்படிச் செய்து, தள்ளி, வழங்கி ஆடச் செய்வது ஒரு முறை.

பந்தை அவரின் முன்பாக சிறிது தூரம் தள்ளிக் கொடுத்து அவரை ஒடி எடுக்கச் செய்து ஆட வைத்தல். இந்த இரண்டு முறைகளிலும். பந்தைத் திறம் படவழங் கில்ைதான் ஆடுவதற்கு எளிது ஆகவும், இதமாகவும் இருக்கும்.

சமாளித்தல் (Tackling)

எதிர்க்குழுவினர் வசமுள்ள பந்தை எப்படியாவது

தன்னுடைய வசமாக்க, முழு முயற்சியோடு போராடி, ஏமாற்றிப் பந்தைத் தனதாக்கிக் கொள்ளும் முறை,

அல்லது பந்தை அவ்வாறு போராடிப் பெற முடியாத “காக்கில், அவர்கள் விரும்பிய இடத்திற்குப் பந்தை அவர் களால் அனுப்ப முடியாதவாறு தடை செய்வது. இந்த முறையைத்தான் சமாளித்தல்’ என்கிருேம், இதல்ை, எதிர்க்குழுவினர் பந்தை எளிதாக எடுத்துக் கொண்டு