பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 193

ஆட்டங்களை எல்லாம் தனி மனிதனுடைய திறனுலேயே

வென்று விடலாம் என்ற நிலைமையில்தான் அமைந்திருந்தன. இன்னும் அமைந்திருக்கின்றன.

நம் நாட்டின் குழு ஆட்டங்களிலே’ (Team Games)

சடுகுடுவும் விரட்டித் தொடும் ஆட்டமான’ (Kho-Kho) கோகோவும் தான் முக்கியமான ஆட்டங்களாகும்.

இந்த விளையாட்டுக்களில் கூட எவ்விதப் பொருள்களின் (பந்து, மட்டை, வலை போன்றவைகளின்) தேவையும் உதவியுமின்றி.எளிய முறையிலேயே எந்தவிதமான பொருட் செலவுமின்றி, இன்பமாக மக்கள் ஆடுவதை நம்மால் இன்றும் காண முடிகிறது.

ஒன்று சேர்ந்து ஆடுகின்ற ஆட்டங்களிலும் கூட தனி மனிதனுடைய திறமைக்கும், இரவு பகலொன்று பாராமல் எந்த நேரத்திலும், எந்த இடம் என்று பாராமலும், கொஞ்சம் பரந்த வெளி இருந்தால் போதும்’ என்று இடத் தைப் பற்றிய கவலையில்லாது ஆடுகின்ற அளவுக்கு ஆட்டம் மிக எளிமையானது. ஊரினர் கூடி மகிழ்வதற்காகவும். பொழுது போக்கிக் களிப்பதற்காகவும் இந்த ஆட்டம் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

பெரும்பாலும் சடுகுடு ஆட்டம் கிராமத்தில் வாழ்கின்ற மக்களாலேயே ஆடப்படுகின்றது. முழு நிலாக் காலங் களிலும், மற்றும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கம்பங் களில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கடியிலும் சடுகுடுவை. ஆடுகின்றனர் மக்கள். தற்போது பள்ளிகளில் இளஞ்சிழுர் களும் இந்த ஆட்டத்தை விரும்பி ஏற்றுக்கொண்டு. மன ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஆடிவருகின்றனர்.

சடுகுடு என்றும், குடுகுடு (Kutu-Kutu) என்றும். டு-டு($ (Do-Do-Do) GT6r plub, ‘Gul. (Kabaadi) grgrayuh Liar

_*