பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 98 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

காரர் எப்பொழுதும் வெளியே நிற்கின்ற வாய்ப்பில்லை. ஆட்டத்திலே ஆடும் அமரர் ஆகிவிட்டதால்தான், இந்த ஆட்டத்தை எல்லோரும் ஆட்டத்தில் அல்லது ‘அமரர் விளையாட்டு என்று கூறி வந்தனர்.

ஆட்ட நேரத்தை அவர்கள் முன்பே, முடிவு செய்து வைத்திருப்பார்கள். இறுதியில் எந்தக் குழு அதிகமான வெற்றி எண்களை எடுத்திருக்கின்றதோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும்.

இவ்வாறு மூன்று ஆட்ட முறைகளிலும் உள்ள ஆட்டத்தின் இணைப்பே இன்றைய ஆட்டம். வெளியேற்றப் பட்டவர் மீண்டும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்வதும், குறிப் பிட்ட கால அளவுக்குள் வெளியேற்றப்பட்டவர்களின் கணக்குப்படி வெற்றி எண்கள் பெறுவதும், ஆட்ட இறுதி நேரத்தில் மொத்தத்தில் அதிக வெற்றி எண்கள் பெற்ற வரே வென்றவர் என்பதும் நாம் அறிந்த விதிகளே.

ஆக, இன்றைய சடுகுடு ஆட்டம் பழைய முறைகளில் அல்லனவற்றைத் தள்ளி, நல்லனவற்றை ஏந்திக்கொண்டு செம்மையாக்கப்பட்ட ஒன்றாகும். வலிமையில்ை மற்றவர் களுக்குத் துன்பமும், ஊறும் நிகழாதவண்ணம் காக்கின்ற தன்மையிலே, செப்பனிடப்பட்டதாக விளங்குவது இன்று

தாம் ஆடும் சடுகுடு ஆட்டம்.

முன்பு கையாளப்பட்டு வந்த முரட்டுத் தனமும், பழி வாங்கும் செயலும் விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, இன்று பல திறன் நுணுக்கங்கள் கொண்டதொரு சிறந்த விளையாட் டாக மாறி விட்டது. இன்று அகில இந்திய அளவிலே, போட்டிகள் நடத்தும் அளவுக்கு வளர்ந்து செழித்திருக் இறது. இவ்வளவு சிறப்பாக சடுகுடுவின் வளர்ச்சி அமைந்த தற்கு ஆட்டத்தின் ஆதரவாளர்களின் இடைவிடா முயற்சியே காரணமாகும்,