பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 199.

கரை அழித்து ஒடுகின்ற காட்டாறைப் போல, விதி கடந்து, நிலை கடந்து, காலங் காலமாக விரிந்து சிதறுண்டு கிடந்த ஆட்டத்திற்குக் கரையும் நிரையும் வழங்கிப் பெருமை செய்வது போல, சடாரா ஆட்டக்காரர்கள் 1918ஆம் ஆண்டிலும், அரிதில் முயன்று ஒழுங்கான விதிகளை உருவாக்கினர்.

1923ஆம் ஆண்டு ‘எச். வி. ஜிம்கான, பரோடாவிலிருந்து (H. V. Gymkana Baroda) L1@u @@@5@irl_fu fi?l ‘il ஏடு வெளி வந்தது. இந்த வெளியீட்டிற்குப் பிறகே,ஆட்டத் திற்கு மறுமலர்ச்சியும் நல்ல வளர்ச்சியும் கிடைத்தது.

பின்னும் மகாராஷ்டிரத்தில் உடற்கலை வல்லுநர்கள் ஒன்றுகூடி, இன்னும் விதிகளைத் தெளிவாக ஆக்கித்தந்தனர், இதற்குப் பிறகு குஜராத்தில் அகில இந்தியக் கபாடி 3List to (All India Kabaadi Competition) 62.3%rs), b1 5.5 to பெற்றது. இதில் 50 குழுக்கள் பங்குகொண்டு போட்டியிட்டு தங்கள் உற்சாகத்தைக் காட்டிகொண்டதோடல்லாமல், மக்கள் திரளாக வந்திருந்து கண்டு களித்திட வழிவகை செய்தனர். தற்பொழுது சடுகுடு ஆட்டம் இந்தியக் கபாடிக் p5,3,3,3}rg TGG) (Kabaadi Federaticn of India) 5sri கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

விளையாடும் முறை

ஆடுகளத்திற்குள் இறங்கி விளையாடுவதற்கு 7 ஆட்டக் காரர்கள் (Regular Players); அவர்களுக்கு மாற்றாட்டக் காரர்களாக (Substitues) 5 பேரும் சேர்ந்ததுதான் ஒரு குழு ஆகும். 20 நிமிடங்கள் ஒரு பகுதிக்கு உண்டு. இரண்டு பகுதிகளுக்கு இடைவேளையாக 5 நிமிடங்கள் உண்டு. இடைவேளைக்குப் பிறகு, குழுக்கள் தங்களுடைய ஆடும். பகுதிகளை மாற்றிக் கொள்ளுதல் அவசியம்.