பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 2014

வெளியேற்றினுல் வெளியேற்றிய அக்குழுவுக்கு, அத்தனை வெற்றி எண்களும் கிடைத்துப் பின்னும் 2வெற்றி எண்கள்

லோன (Lona) என்ற பெயரில் கிடைக்கும்.

எந்தக் குழு ஆட்ட இறுதியில் அதிகமான வெற்றி எண்கள் அடைந்திருக்கிறதோ, அக்குழுவே வெற்றி பெற்ற

தாகக் கொள்ளப்படும்.

ஆட்ட முடிவில்,இரண்டு குழுக்களும் சமமான எண்ணிக் கைப் பெற்றிருந்தால், 5 நிமிடங் கொண்ட இரு மிகை நேரம் (Extra Time) கொண்டு ஆடவேண்டும். அப்படி ஆடும் மிகை நேரப் பகுதியில் இரண்டாவது பகுதியின் (Half) இறுதியில் ஆடிக்கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் தான் கலந்து கொள்ள முடியும்.

இவ்வாறு மொத்தமாக 50 நிமிடங்கள் ஆடியும் வெற்றி தோல்வி அறியப்படவில்லையென்றால், முதன் முதல் வெற்றி எண் எந்தக் குழு எடுத்திருக்கின்றதோ, அக்குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும். சூழ்நிலை மற்றும் இயற்கை யால் ஏற்படும் இடையூறுகளால் ஆட்டம் முடிவு பெருது நின்று விடும் பொழுது, ஆட்டம் முதலிலிருந்தே தொடங்கப்

பட வேண்டும். o

முதலில் ஆட்டம் தொடங்குகின்ற வேளையில், ஒரு குழுவில் ஏழு ஆட்டக்காரர்கள் இருந்தாலும் ‘இல்லா விட்டாலும், அப்பொழுது வந்திருக்கின்றவர்களை வைத்தே . ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.

அவ்வாறு குறைந்த எண்ணிக்கைக் கொண்ட ஆட்டக் காரர்கள் உள்ள குழுவில், அத்தனை பேரும் வெளியேற்றப் பட்டால், வராத ஆட்டக்காரர்களையும் ஆட்டத்திலே தொட்டு வெளியேற்றியதாகக் கருதப்பட்டு, வராத

வி. வ. வர.-13