பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

எதிர்க்குழுவினருக்கு ஒரு வெற்றி எண்ணையும் தர வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒரே குழுவைச் சேர்ந்த சிலர், சேர்ந்தாற் போல் எதிர்க் குழுவை நோக்கிப் பாடிச் செல்லும் பொழுது, நடுவர் எல்லோரையும் அழைத்து, அவர்கள் பகுதிக்குப் போகுமாறு செய்து, பாடுகின்ற வாய்ப்பை எதிர்க்குழுவிற்கு அளித்துவிடுவார்.

இவர்களில் எதிர்க் குழுவினர் யாராவது தொடப்

r

பட்டிருந்தால், அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

இவ்வாறு ஒருமுறை எச்சரிக்கப் பட்டதற்குப் பிறகும் சிலர் சேர்ந்தாற்போல் எதிர்க்குழுவை நோக்கி மீண்டும் பாடிச் சென்றால், முதலில் பாடிச் சென்றவரைத் தவிர, பின்னுல் பாடிச் சென்ற மற்றவர்கள் எல்லோரும் வெளி யேற்றப்படுவார்கள். எதிர்க்குழுவிற்கு இதல்ை வெற்றி எண்கள் கிடைக்கின்றன.

இன்னும், பாடிச் செல்வோர் எதிர்க்குழுவினுள் கின்று கொண்டிருக்கும்பொழுது, பாடுவதை நிறுத்தி விட்டால், அவர் உடனே வெளியேற்றப்பட்டார்’ (out) என்று அறிவிக்கப்படுவார். அவர் பாடிச் செல்கிற மூச்சை, நடுக் கோடு வரையிலும் திரும்பிக் கொண்டு வந்து தான் நிறுத்த

வேண்டும்.

பாடிச் செல்வோர் எப்பொழுதாவது ஆடுகள எல்லையை விட்டு வெளியே கால் வைத்தாலும் வெளியேற்றப்படுவார்.

2. பிடிப்பவர் கவனிக்க (Anti Raider)

தன்னுடைய பகுதிக்குப் பாடி வரும் ஆட்டக்காாரைப் பிடிப்பவர்கள், அவரைப் பிடித்ததும், அவர் வாயைப் பொத்திப் பாடுவதை நிறுத்தவோ, முயலவோ கூடாது.