பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பயன்படுத்தப்பட்டன. இதல்ை விற்பயிற்சியைப் பின்பற்று வாரில்லாது போனது. அதிலிருந்த ஆர்வமும் ஆசையும் குன்றலாயின.

இந்த நேரத்தை மக்கள் நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள விழைந்தனர். மன்னரிடம் சென்று, ஆட்டம் வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். தலைமைப் பீடத்திலே இருந்த மன்னருக்குத் தன்மையும், தெளிந்த மதிவன்மையுமிருந்ததால், மக்கள் சமுதாயத்தை மதித்தார். பழையனவற்றைத் தள்ளி, Ι Ι6l) புதிய சட்டங்களை இயற்றி, 1603ஆம் ஆண்டு கால் பந்தாட்டம் வளர வழி அமைத்தார்.

இந்த ஆட்டத்தை வாழ விட்ட பெருமை மன்னர் ‘முதலாம் ஜேம்ஸ்’ (James I) அவர்களையே சாரும். இந்த வாய்ப்பைப் பெற்ற மக்கள் உள்ளங்கள் எல்லாம் துள்ளி விளையாடின. கால் பந்தாட்ட இயக்கங்கள் இங்கிலாந்து முழுவதுமே தோன்ற ஆரம்பித்தன. மன்னரின் வாழ்த்துக்களோடு ஆட்டம் வளரத் தொடங்கியது.

பதினேழாம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாம் சார்லஸ் (Charles II) என்பவரால், இந்த விளையாட்டு செப்பனிடப்பட்டு, விளையாடுதற்கேற்ப அமைக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு இறுதியைக் காணப் போகும் நேரத்தில் கால் பந்தாட்டம் மன்னர்களின் ஆதரவையும், வாழ்த்தையும் பெற்று, முன்னிலும் பன்மடங்கு செல்வாக்கோடு உலவத் தொடங்கியது.

பதினேரும் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இடைக் காலம் வரை, இந்த ஆட்டம் ஒரு உதைத்தாடும் ஆட்டமாகவே (Kicking Game) இருந்து வந்தது. நுண் திறனும் (Skills) நேரிய செயல் முறையும் ஆட்டத்திலில்லாது, பந்தை உதைப்பதே முழு நோக்கமாகக்