பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கஷ்டப்பட்டு பிடிபடாமல் தப்பிச் செல்லும் போது, அவரைப் பின்தொடர்ந்து சென்று உடன்பாடி அடிக்கவும்’ {Chase) எதிர்க்குழு முயற்சிக்கக் கூடாது,

ஒரு காலைத் துக்கிப் பிடித்து சமநிலை இழக்கச் செய்து பிடித்தல்

3. வெளியேற்றுதல் (Out)

பாடி வருபவர் பிடிபட்டாலும், அல்லது. பாடியவர் எதிர்க்குழுவினரைத் தொட்டு விட்டு பாதுகாப்பாகத் தன் பகுதியைச் சேர்ந்து விட்டாலும், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் பிடிபட்டவர், தொடப்பட்டவர் இருவரு மேயாகும். ஆட்ட எல்லைக்கோட்டை விட்டு வெளியே யாராவது ஆடும்நேரத்தில் சென்றால், அவர்கள் உடனே வெளியேற்றப்படுவார்கள்.