பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2} 6 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

தேவையான பொருட்கள் கொஞ்சமே. எளிமையில் இன்பங் கானும் நம் இந்தியப் பண்பாட்டிற்கு இந்த ஆட்டமே ஒரு எடுத்துக்காட்டாகும்.

விளையாடும் நேரம்

ஒன்பது பேரைக் கொண்டது ஒரு குழுவாகும். 3 மாற்றாட்டக்காரர்கள் உண்டு. எதிர்க் குழுவினரை விரட்டுவதும்’ (Chasing) விரட்டுபவர்களால், விரட்டப் பட்டு ஒடுவதும் (Running) ஆன இந்த நிலையை ஆடும் வாய்ப்பு (Inning) என்கிருேம். ஒரு போட்டி ஆட்டத்தில், ஒவ்வொரு குழுவும் இரண்டு தடவை (இரு முறை விரட்டுவதும், விரட்டப்படுவதும்) ஆடும் வாய்ப்பை’ பெற வேண்டும்.

நாணயத்தைச் சுண்டுவதில். வெற்றி பெற்ற குழுத் தலைவர், தங்களுக்கு, ஒடுவதா,விரட்டுவதா என்று தெரிந்து சொல்வார்.

விரட்டும் குழுவினர் எட்டு பேர் ஆட்டத் தொடக் கத்தில் தங்களுக்கான இடங்களில் குதிகால்களின் மேல்

உட்கார்ந்திருப்பார்கள். (உட்காரும் முறையை விரட்டு

வோர் கவனிக்க) என்ற பகுதியில் காண்க. ஒன்பதாவது “gyt sog. L-QGairrgr” (Active Chaser) நீண்ட சதுரக்

கோட்டில் நிற்கின்ற கம்பத்தை ஒட்டி நின்று கொண்டு

இருப்பான்.

ஒடும் குழுவினரில் முதல் மூவர் (First Three) ஆட்டத் தொடக்கத்தில் ஆடுகளத்திற்குள் வருவார்கள். நடுவரின் குழலொலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்கும்.

முதல் மூவரும் தொடப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட பிறகு, இரண்டாம் மூவர் (Second Three) உள்ளே வர