பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

அதாவது ஒருவர் மேற்குப் புறமாக திரும்பி உட்கார்ந் திருந்தால் அவரையடுத்து உட்கார்ந்திருப்பவர் கிழக்குப் பக்கமாக உட்கார்ந்திருக்க, இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் திசை மாறி உட்கார வேண்டும்.

==

தவருன உட்காரும் முறை ஒடி விரட்டுகிற (Acitve Chaser) ஒன்பதாவது ஆட்டக் காரர் ஆட்டத்தைத் தொடங்க, இரு முனையில் இருக்கும் ஏதாவது ஒரு கம்பத்தின் (Post) அருகில் நின்று கொண்டு இருப்பார்.

ஒடுவோரைத் தொடுவதற்கு ஓடி விரட்டுகின்றவர் விதிகளை மீருமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விதிகளை மீறித் தொட்டாலும் ஒடுவோர் வெளியேற்றப்பட மாட்டார்கள். (Not out). தொட்டவருக்கு வெற்றி எண்ணும் கிடைக்காது போய்விடும்.

விரட்டுவதற்குரிய விதிகள் :

(1) ஒடி விரட்டி வருபவர் தன் குழுவினரில் ஒருவரை எழுப்பும் பொழுது, அவரது பின்புறமாகச்