பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ கோ ஆட்டம் 223

ஒடிவிடக் கூடாது. ஒடவும் முயலக் கூடாது. ஒடி விரட்டுவோன் ‘கோ’ என்று சொல்லி ஒருவரை எழுப்பிவிட்ட பிறகு, உடனே அதே இடத்தில் அதே திசைப் பக்கம் திரும்பி உட்கார்ந்துவிட வேண்டும்.

(10) மூவர் மூவராக’ ஒடுபவர்கள் ‘உள்ளே வருவார்கள். அந்த மூன்று பேரில் இறுதியாகத் தொட்டு வெளியேற்றிய ஒடி விரட்டுவோர்’ ஒருவர், இரண்டாவதாக வரும் மூவரையும் உடனே ஒடித் தொடக் கூடாது, தொடவும் முடியாது. அதனல். அவர் அடுத்த வருக்கு சீக்கிரமாகக் கோ கொடுத்துவிட்டு. அவரை

ஒடச் செய்து, தான் உட்கார்ந்து விட வேண்டும்.

இவ்வாறு, தெரிந்தோ தெரியாமலோ, விரட்டு பவர்கள் இடையிடையே செய்யும் தவறுகளை, நடுவர்கள் கண்டுபிடித்து, விசில் ஊதித் திருத்தி. அவர்கள் ஒட வேண்டிய திசையைக் காட்டுவார்கள். ஆட்டக்காரர்கள் அந்தத் திசைப் பக்கம் தான் ஒட வேண்டும். இந்த விதிகளை மீறி விரட்டுவோர், ஒடுவோரைத் தொட்டாலும், அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

ஒடுவோருக்குரிய குறிப்புக்கள் (Runners)

ஒடுவோர் ஆடுகளத்தின் உள்ளே எங்கு வேண்டு மானுலும் நிற்கலாம், ஒடலாம்; ஒடுவோருடைய கால்கள் இரண்டும் ஆடுகளத்தின் எல்லைக் கோட்டை விட்டு வெளியே சென்றால், அவர் வெளியேற்றப்படுவார் (Out). கால்கள் இரண்டும் வெளியேயிருந்து, உடல் முழுவதும் ஆடுகளத்தின் உள்ளே இருந்தாலும், அவர் வெளிபில் சென்றதாகத்தான் கருதப்படுவார்.