பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஒடுவோர் உட்கார்ந்திருப்பவரை எக்காரணத்தை முன்னிட்டும் தொடக்கூடாது. தொட்டால் முதல் முறை யாக எச்சரிக்கப்படுவார். மீண்டும் தொட்டால் அவர் உடனே வெளியேற்றப்படுவார். அதனல் எதிர்க் குழுவிற்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்,

எந்த முறையிலேனும் ஒடுவோர், ஆட்ட விதிமுறைப் படி, விரட்டுவோர்களால் கையில்ை தொடப்பட்டால், அவர் வெளியேற்றப் படுவார்.

ஒடுவோர் தங்கள் பெயர் கொடுத்திருந்த வரிசைப்படி தான் மூவர் மூவராக ஆடுகளத்திற்குள் வர வேண்டும். வருவதற்கு அவர்கள் காலம் தாழ்த்தக்கூடாது. காலம் தாழ்த்தி உள்ளே நுழைபவர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.

சில முக்கியக் குறிப்புக்கள்

(1) “{33, I” Q4 T yt#, (To give Kho)

‘கோ’ சொல்லும் விரட்டுவோரில் ஒருவர், சத்த மாகவும் தெளிவாகவும், பிறருக்குக் கேட்கும் வண்ணமும் சொல்ல வேண்டும். உட்கார்ந்திருக்கும் தன் குழுவினரில் ஒருவரைத் தொடுகின்ற நேரத்தில்தான் சொல்ல வேண்டும். தொடுவதும் சொல்லுவதும் எப்பொழுதும் ஒன்று போல். இருக்க வேண்டும்.

(2) திசை கொள்ளல் (To take a Direction)

•. # ,ெ H off- o † # H # ஒரு கம்பத்திலிருந்து மறு கம்பத்திற்கு விரட்டுவோர் செல்லும் திசையே திசை கொள்ளல்’ எனப்படும். ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செல்லும் பொழுது, தன்