பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ கோ ஆட்டம் 225

முகத்தைத் தன்னுடைய தோள்பட்டை நேர்க் கோடு வரைதான் திரும்பிப் பார்க்க வேண்டும். அதற்கும் மீறி, பின்புறம் திரும்பிப் பார்த்தால், அது முகத்தைத் 305t'll jug (To turn the face) orgrp 56.101565 (Fou!). ஆளாக நேரிடும்.

ஆகவே, நேரே செல்ல வேண்டியதுதான் முறை. இந்தத் தவறைக் கண்டுபிடித்த நடுவர், விரட்டுவோரை எந்தத் திசையில் போகச் சொல்லுகின்றாரோ, அந்தத் திசைப் பக்கம்தான் செல்ல வேண்டும்.

(3) லோனு’ (Lona)

குறிப்பிட்ட 7 நிமிட நேரத்தில், ஒடுவோர் அத்தனை பேர்களையும் தொட்டு வெளியேற்றி விட்டால், விரட்டும் குழுவினருக்கு, அவர்களின் எண்ணிக்கைப் பகுதியில் (Score Book) லோன என்று எழுதப்படும். சடுகுடுவில் லோனுவுக்கு 2 வெற்றி எண்கள் உண்டு. ஆனல் கோகோவில் லோன குறிக்கப்படுகிறதே தவிர, இதற்காக தனியே வெற்றி எண்கள் தரப்படுவதில்லை. விரட்டும் குழுவினரின் திறமைக்கு மதிப்பளிப்பதற்காகவே லோன குறிக்கப்படுகிறது.

சில முக்கிய திறன் நுணுக்கங்கள்

கோ கோ ஆட்டம் வெறுமனே ஒடவும், விரட்டிப் பிடிக்கவும் வாய்ப்புத் தருகின்ற ஆட்டமாக மட்டுமல்ல. ஒரு சிறந்த மனிதரை உருவாக்கும் தன்மையிலே அமைந்த ஆட்டமாகவும் விளங்குகிறது.

நல்ல உடல் திறநிலை. நினைத்த நேரத்தில் நினைத்த பக்கம் வளைந்து தருகின்ற தரமான உடல் நிலை; வேண்டும் தருணத்தில் மிக வேகமாக ஒடக் கூடிய விரைவோட்டம்: