பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

“கனடா கால் பந்து’ என்றும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி ரேலியா கால் பந்து என்றும் பல்வேறு பெயர்களில் இருந்து வருகிறது. ரக்பி (Rugby) என்ற ஒருவகை ஆட்டம் இதிலிருந்து தோன்றியதாகும்.

இந்தியாவில் கால் பந்தாட்டம்

வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களுடைய தாயகத்திலிருந்து நாட்டுப் பற்றையும், நல்ல மொழிப் பற்றையும் தாங்கிக் கொண்டு வந்ததோடு அமையாது, பெருமை தரக்கூடிய பல முக்கியமான விளையாட்டுக்களையும் எடுத்துக்கொண்டு வந்தனர். அவைகளிலே முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பவை வளைகோல் பந்தாட்டமும், கால் பந்தாட்டமும் தான்.

கிழக்கிந்தியக் கம்பெனியாரால் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட கால்பந்தாட்டம், முதன் முதலில் ஒரு சிலரால்தான் ஆடப்பட்டு வந்தது. அவர்களில் ‘அரசாங்கப் பணியாளர்(Civil Service), வணிகத் தொழில் நிலையத்தார், படைத்துறையினர், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணி யாற்றும் (ஆங்கிலேயர்) ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். அதன் பின்னர், இந்தியர்களும் மெல்ல மெல்ல இந்த ஆட்டத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

நமது கால்பந்தாட்டம் வேரூன்றி வளர்வதற்கு ஆதாரமாக இருந்த நகரங்கள் கல்கத்தாவும் பெங்களுரு மாகும். ஏனெனில். இங்கிலாந்தின் போர் வீரர்கள் எல்லாம் இந்த நகரங்களில் வந்து தான் தங்குவது வழக்கம். அவர்கள் ஆடிவந்ததன் விளைவே, கால் பந்தாட்டம் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிட வழி பிறந்தது.

நம் நாட்டில் மிகப் பழமையான கால் பந்தாட்டச் சங்கமாக இருந்தது கல்கத்தாவில் உள்ள டல் ஹெளசி