பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s

24 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பந்தாட்டக் கழகம் காலூன்றுவதற்குக் காரணமாக அமைந்த தென்பர்.

நாட்டு அளவிலேதான் கழகம் அமைக்கப்பட்டிருந்ததே தவிர, அனைத்திந்தியாவிலும் உள்ள சங்கங்களைக் (Foot ball Clubs) கட்டிக் காக்கும் பொறுப்பும், அதிகாரமும் இதற்கு இல்லாதிருந்து. 1937ம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 27ந் தேதி அதிகாரம் வாய்ந்த அகில இந்தியக் கால் Li 5 frl _l_3; 35p3 Lb @6r spi (All India Foot ball Association) தோற்றுவிக்கப்பட்டது.

நாளும் நாட்டிலே நிறைந்து, மக்களுடையஉள்ளங்களைத் தன்னுடனே இணைத்துக் கொண்ட ஆட்டம், ஒலிம்பிக் ஆட்டப் போட்டிகளிலே நம்மவர் கலந்து கொள்ளும் அளவுக்கு வலிவும் பொலிவும் பெற்று வளர்ந்தது. 1948ஆம் ஆண்டு இலண்டன்’ மாநகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் (Olympic games) முதன் முதலாக இந்தியா கலந்து கொண்டு பிரெஞ்சு (France) நாட்டுக்கு எதிராக ஆடித் தோற்றது. 1952ம் ஆண்டு, அனுபவத்திலும் ஆற்றலிலும் சிறந்த யூகாஸ்லாவோக்கியாவோடு ஆடித் தோற்றது. -

தோற்ற அனுபவமும், விளையாட்டில் உள்ள நுணுக்கப் பயிற்சிகளை அறிந்து கொண்ட ஆற்றலும், நம்மவர்கள் முன்னேற்றத்திற்குத் துணையாக அமைந்தன. அதன்பயனுக, கால் பந்தாட்டக் காலணியைப் (Foot ball boot) அணிந் தாடும் பழக்கத்தைக் கட்டாயமாக்கி, ஆடிப்பயின்றனர். இதன் பயனுக 1956-ம் ஆண்டு ஐகர்தாவிலே (Jakarta) நடந்த ஆசியா விளையாட்டுப் போட்டியிலே (Asiangames) இந்தியா இந்த ஆட்டத்தில் ஆசிய வெற்றி நாடாக

(Asian Champion) (p.530 lb GL si gy 673 roug. 3,'Tp

பந்தாட்டத்தில் நாம் சிறப்புற வளர்ந்திருப்பதையே

காட்டுகிறது. இன்னும் முயன்றால் சீரிய நிலையையும் புகழை

யும் அடையலாம். முயல்வோம் அடைவோம்.