பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 27

படும். உடனே இரு குழுவினரும் தங்கள் தங்களது இடங் களுக்குச் சென்று, ஆடுதற்குத் தயாராக நிற்க வேண்டும்.

ஆடுகளத்தின் மையமான இடத்திலே’ (Centre spot) பந்து வைக்கப்பட்டிருக்கும். நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு ‘நிலை உதை’ என்று கேட்டவர்கள் உதைத்துத் தள்ளி ஆடத் தொடங்குவர். இவ்வாறு ஆட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இரு குழுவினரும் பந்தை உதைத்துத் தள்ளி, தலையா லிடித்து, மார்பால் வயிற்றால் தேக்கி ஆடி, எதிர் குழுவினருக்கு உரிமையான, அவர்களால் காத்துக் கொள்ளப் படுகின்ற, இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். இலக்கிற்குள் ஒரு முறை பந்தை உதைத்துத் தள்ளி விட்டால், ("வெற்றி எண்’ என்ற பகுதியைக் காண்க) தள்ளிய குழுவினர் ஒரு வெற்றி எண்’ (Goal) பெறுவார். இவ்வாறு ஆட்ட இறுதியில் எந்தக் குழுவினர் அதிக எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவார்.

ஆடும் நேரம்

விளையாடும் மொத்த நேரத்தை இரண்டாகப்பகுத்து, “ஒவ்வொரு பகுதியும் (Half) 45 நிமிடமாக வைக்கப் பட்டிருக்கிறது. இந்த நேர அளவைவிட குறைவான நேரம்’ ஆட்டத்திற்கு இருக்க வேண்டுமானல், இரு குழுத்தலைவர் களும் மனநிறைவோடு ஒப்புக் கொண்டால், நேரத்தைக் குறைத்து தேவைக் கேற்ப வைத்துக் கொள்ளலாம். 5 நிமிடங்களே இடைவேளை’ நேரமாக (Interval) தரப் பட்டிருக்கிறது.

இவ்வாறு ஆடுகின்ற முழுநேர ஆட்டத்தில், எந்தக் குழுவும் எதிர்க்குழுவினருக்குள்ள இலக்கினுள் பந்தைத்