பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

உருண்டோடும் அளவுக்கு பந்தை உதைக்க வேண்டும். பிறர் பந்தைத் தொடுவதற்கு முன், தானே மீண்டும் இரண்டாவது முறையும் தொடாமல் அல்லது ஆடாமல் இருக்க வேண்டும். இதுதான் விதிகளுக்கு அடங்கிய ஆட்டம். இந்த விதிகளை மீறில்ை, அதற்குத் தண்டனையாக, தவறு செய்தவருக்கு எதிராக, அவர்களின் பகுதியை நோக்கி எதிர்க்குழுவினர், பந்தைத் தனியுதை'யால் (Free-Kick) உதைத்து, ஆட்டத்தைத் தொடங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

(3)},) 55 flu 1503, (Free-Kick)

எந்தவிதத் தடையுமே இல்லாது, எதிர்க் குழுவினரின் பகுதியை நோக்கி பந்தை உதைப்பதற்குரிய தனி வாய்ப்புப் பெறுவதையே தனி உதை’ என்கிருேம்.

“தனியுதை தொடங்குவதற்கு முன்னர், பந்து நிலையாக (Dead ball) (உருளாதபடி) இருத்தி வைக்கப்பட வேண்டும். பந்திலிருந்து பத்து கெசதுரத்திற்கு அப்பால், எதிர்க் குழுவினர் எல்லோரும் நின்று கொண்டிருக்க வேண்டும். நடுவரின்விசில் ஒலிக்குப் பிறகே பந்தை உதைக்க வேண்டும். உதைக்கப்பட்ட பந்தை, உதைத்தவரே மீண்டும் ஆடக் கூடாது.மற்றவர் எவரேனும் பந்தைத் தொட்ட பின்னர் அவர் தொடர்ந்து ஆடுவதுதான் விதியாகும். தனியுதையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. Ghiop 35 ifulon B (Direct Free Kick) 2. idon pop joiful on 5 (Indirect Free Kick)

G.B(Up 35ofujo (Direct Free Kick)

இந்த வாய்ப்பைப் பெறுகின்ற குழுவினர், நேராகவே

பந்தை உதைத்து ஆடி, எதிரியின் இலக்கிற்குள் செலுத்தி, வெற்றி எண்ணைப் பெறலாம். வேண்டு மென்றே,