பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

விருப்பமான செயலுக்குத் தான் விளையாட்டு எ ; பெயர். விருப்பமான செயல்களை, விருப்பமுள்ளவர் , தாங்கள் விரும்பியவாறு விளையாடப் புகும்பொழுது, று வேறு முறைகள் முளைத்தெழுவதும், கிளைத்தெழுவதும் இயல்புதான்.

மனித முகங்கள் மட்டும் மாற்றங்களுடன் தெரிவதில்லை. மனித மனங்களும் மற்றும் குணங்களும் ஒருவர்க்கொருவர் வித்தியாசப்பட்டும் வேற்றுமைப்பட்டும்தான் தெரிகின்றன. புரிகின்றன.

மனமும் குணமும் மாறுபட்டாலும், மார்க்கம் ஒன்றாக இருந்தால்தான், வழிமுறைகள் நன்றாக இருந்தால்தான், செல்லும் வழியில் சுகமிருக்கும், கொள்ளும் பயனில் நிறைவிருக்கும்.

இல்லையேல், எதிர்பாராத சோதனைகளும் வேதனை களும் இடையிடையே வந்து இடறிவிழும். இடறி விடும் இன்னல்களைத் தரும். எதிர்பார்த்த இன்பங்கள் எல்லாமே மாறி மாறி நம்மை எங்கேயோ விரும்பாத ஒரிடத்திற்கு இட்டுச் சென்று விடும்,

அத்தகைய அவல நிலை ஆறறிவு படைத்த மனிதர் களுக்கு வரக்கூடாது. வந்துவிடக் கூடாது என்பதால்தான், பகுத்தறியத் தெரிந்தவர்கள் பயனுள்ள செயல்களை