பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

சமம்’ என்று (Draw) அறிவிக்கப்படும். பின் மிகை நேரத்தில் ஆடியே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும். இரு குழுக்களும் வெற்றி தோல்வியின்றி சம நிலையில் இருந்தால் சமநிலையை நீக்கும்முறை (Tie Breaker):

வெற்றி தோல்வியின்றி கால்பந்தாட்டம் முடிவடைந்து விட்டால், சீட்டெடுப்பின் மூலமாகவோ Lot) அல்லது நாணயம் சுண்டுதலின் மூலமாகவோ (Toss) வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற முறைக்குப் பதிலாக, ஒறுநிலை உதை (Penalty Kick) எடுப்பதன் மூலம் தீர்வு காண்பதற்கே சமநிலை நீக்கு முறை பயன்படுத்தப்படுகிறது.

அப்போது, ஒறுநிலை உதையை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

1. எந்த இலக்குப்பகுதியில் ஒறுநிலை உதைகளை (Penalty Kicks) எடுப்பது என்பதனை நடுவர்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

2. நடுவர் நாணயத்தைச் சுண்டியெறிந்திட, அதில் வெற்றிபெறுகிற குழுத்தலைவரே முதன் முதலில் ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பினைப் பெறும் தகுதி பெறுகின்றார்.

3. ஒவ்வொரு குழுவிற்கும் 5 முறை ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு குழு மாற்றி ஒரு குழு (Alternate) என்ற முறையில்தான் இந்த வாய்ப்பினைப் பெற வேண்டும்.

4. ஆட்டம் முடிவடைகின்ற பொழுது அல்லது மிகை நேர ஆட்டம் (Extra time) முடிகின்ற பொழுது, அந்தந்தக் குழுக்களில் இருந்து ஆடிய ஆட்டக்காரர்களே, ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பில் பங்கு கொள்ள முடியும்.

5. ஆடத் தகுதிபெற்றுள்ள ஒரு குழுவின் ஆட்டக் காரர்கள் அனைவரும், ஒறுநிலை உதை எடுப்பதில் பங்கு