பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 4]

பெறலாம். இலக்குக் காவலன் கூட பங்கு பெறும் வாய்ப்பு உண்டு.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆட்டக்காரரே (Different Player) ஒறுநிலை உதையை உதைக்க வேண்டும்.

6. 5 முறை வாய்ப்பு பெற்ற பிறகும் இரண்டு குழுக் களும் சமநிலையிலிருந்து மீண்டும் 5 முறை வாய்ப்பு கிடைக்கும்போது, இரண்டாவது முறை உதைத்தாட ஒரு ஆட்டக்காரருக்கு உரிமை உண்டு.

7. உதைத்தாட தகுதி பெற்ற ஆட்டக்காரர் ஒருவர், இலக்குக் காவலருக்குப் பதிலாக தானே இலக்குக்

காவலராகப் பணியாற்றலாம்.

8. ஒறுநிலை உதை எடுக்கப்படும்பொழுது, உதைத்தாட இருப்பவர், தடுத்திடும் இலக்குக் காவலர் இருவரைத் தவிர, மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும் மைய வட்டத்திற்கு உள்ளேதான் (Centre Circle) நிற்க வேண்டும்.

9. பந்தை உதைத்தாட இருக்கும் ஆட்டக்காரரின் (Kicker) பாங்கரான இலக்குக்காவலர், இலக்குக் கோட்டுக்கு இணையாக இருப்பது போல ஒறுநிலைப் புள்ளியிலிருந்து (Penalty mark) 10 கெஜ தூரத்திற்கு அப்பால்தான் நின்று

கொண்டிருக்க வேண்டும்.

10. 5 முறை கொடுத்த வாய்ப்பில் இரு குழுக்களும் சமமான வெற்றி எண்கள் (Goals) பெற்றிருந்தாலும், அல்லது வெற்றி எண்ணே பெருமல் போயிருந்தாலும், முன்னர் விளக்கிய முறையில்தான் ஒறுநிலை உதைகள் எடுக்கப்பட வேண்டும்

வி. @lf. வ.-3