பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 45

பந்தையும் சரியாகத் தடுத்தலும் மிகமிக அவசியம். கால்களாலேயே பந்தை முழு ஆட்ட நேரமும் தடுத்து விளையாட முடியாது. அப்படி முயன்றாலும் ஆட முடியாது. ஆகவே கால்களுடனே உடலும் ஒத்துழைத்துக் கொண்டு தானிருக்கும். அதனையும் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும்.

தரையோடு தரையாக வரும் பந்தைக் கால்களாலும் (Feet); கொஞ்சம் தரைக்கு மேலே உயரமாக எழும்பி வரும் பந்தை முழங்கால்களுக்கிடையிலும் (Knees); தொடை களுக்கிடையிலும் (Thighs); இன்னும் சற்று மேலே உயர்ந்து வரும் பந்தை வயிற்றிலுைம் (Abdomen); பின்னர்

மார்பிலுைம் (Chest) பிறகு தலையினலும் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும்.

ஆகவே உயர்ந்து வரும் பந்தைத் தடுக்க சரியான நேரத்தோடு சரியான நிலையில் வைத்து (Right Place at the right time) தொடர்பு கொண்டு தடுக்க முயல வேண்டும். பந்தை தடுத்து நிறுத்தினலே நாம் ஆடுகின்ற ஆட்டத்தில் பாதி விளையாட்டு முடிந்தது போல ஆகும்.

தன்னிடம் வருகின்ற பந்தை தடுத்து நிறுத்தில்ை தானே, தன் குழுவினருக்கு சரியாக வழங்கவோ அல்லது வன்மையாக உதைக்கவோ முடியும்! பந்தை வழங்கி (Pass) ஆடுவதற்குப் பந்தை தடுத்து நிறுத்தும் பயிற்சிதான் முதலில் பெரிதும் வேண்டற்பாலது.

(3) 11:550 b Gilpi13, Bi (Passing the ball)

தடுத்து நிறுத்தப்பட்ட பந் தானது கால்களின் கட்டுப் பாட்டுக்குள் அடங்கி விடுகிறது. தன் கீழுள்ள பந்தை உடனே உதைப்பதும்; அடுத்து நிற்கும் தன் குழுவினருக்கு வழங்குவதும் அப்பொழுதைய தேவையான சூழ் நிலையைப்