பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பொறுத்ததாகும். ஏனெனில், கால் பந்தாட்டம் தனிப் பட்டவரால் மட்டும் ஆடப்படுகின்ற ஒரு ஆட்டமல்ல. பதினுேரு பேரும் ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக உருவாகி, ஒத்துழைத்து, ஒரே மனப்பான்மையுடன், ஒரே நோக்கத்துடன் ஆடுகின்ற குழு ஆட்டமாகும். பந்தை (கொடுப்பதும்) வழங்குவதும், மீண்டும் பெறுவதும் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தனிப்பட்ட ஒருவரால் ஆட்ட நேர முழுதும் ஆடுதல் என்பது (Self), இயலாததொன்று. அவரவருடைய இடத் தையும் காத்து (Position) ஆட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் உண்டு. ஆகவே, பந்தைத் தனக்கே சொந்தம் என்று எண்ணி தானே ஆடாமலும் (Self game); தானே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று விரும்பி, இலக்கிற்குள் எல்லா நேரமும் பந்தை உதைக்க முயற்சிப்பதும், எல்லோருடைய ஆட்டத்தையும், வரக் கூடிய வெற்றியையும் பாழாக்கக் கூடியதாக்கிவிடும். வெற்றியும், ஆட்டத்தில் ஒருவித மகிழ்வும் அடைய வேண்டு மால்ை, பந்தை வழங்கும் நுண்திறனைப் பெருக்கிக் கொள்ளுதல் ஒவ்வொரு ஆட்டக்காரரின் தலையாய கடமையாகும்.

இலக்கின் அருகிலே பந்துடன் இருக்கும்பொழுது, எதிர்க் குழுவினரும் ஒடி வந்து தடை செய்ய முடியாத நிலையில் இருக்கும்பொழுது, பந்தை உதைத்தால் இலக் கினுள் நுழைந்து விடும்’ என்ற வாய்ப்பு இருந்தால், பந்தைக் குறியோடு உதைக்கலாம். இல்லையென்றால். தன் குழுவில் உள்ளவரிடம் பந்தை வழங்கி ஆடலாம். இன்னொருவரிடம் பந்து கிடைக்கும் வாய்ப்பு உண்டானல், எளிதாக இலக்கினுள் பந்தை அடிக்கக் கூடிய நிலையில் நின்று கொண்டிருப்பார். இவ்வாறு நிலைமையைக் கண் காணித்து, பந்தை வழங்குகின்ற ஆற்றலைக் காண்கின்ற எல்லோரும், போற்றத்தான் செய்வார்கள். இலக்கினுள்