பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பண்பான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால்தான், விருப்பமான செயல்களை,விளையாட்டுக்களை மேற்கெ ான்ன நல்ல விதிமுறைகளையும் வழிவகைக னே யும் உருவாக்கித் தந்திருக்கின்றனர்.

லிளேயாட்டை விளையாட்டாகவே பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது விளையாட்டாகவே செய்கின்ற முறைதான் என்றாலும், விளையாட்டைப் பற்றிய அடிப்படை கருத்து ஒரு மாதிரியாகத்தான் பொது மக்களிடையே இன்று வரை பரவி வந்திருக்கின்றது.

விளையாட்டு என்பது பல விஞ்ஞான இயல்களின் தொகுப்பு என்பதைத்தான் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். எல்லோரும் ஆடக் கூடியதுதான் வினேகாட்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆல்ை, ஆடக் கூடிய எல்லோருமே அறிவியல் பூர்வமாக ஆடுகின்றார்களா

Tu

என்றால் அதுதான் இல்லை. இல்லவே இல்லை.

உடலியல், உடற் கூறு, உளவியல், தத்துவம், வேதியல். புவி இயல், அணுவியல் போன் ற பல அறிவியல் முறைகள் சேர்ந்ததுதான் வினேமோட்டுச் செயல்களாக இன்று வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மலர்ச்சியுற்றிருக்கின்றன.

விஞ்ஞானக் கருத்துக்கள் எல்லாம் செயல்படும் சங்கமத் தலமாகத்தான் இன்று விளையாட்டுக்கள் விளங்கி வருகின்றன. அதனை அருமையுடன் போற்றி திறமையுடன் பயிற்சி செய்தால், தேகத்திற்கு சிறந்த பலமும், வளமும் கிடைப்பதுடன், சிந்தைக்கு சிறந்த மனே பலமும், மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என்பதுடன், பலருடன் கூடப் பழகுகின்ற வாய்ப்புக்களுடன், பிறந்த நாட்டிற்குப் பெரும் பணி ஆற்றக்கூடிய வாய்ப்பும் பெருமையும் நிறையவே கிடைக்கின்றன என்பது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மைதான்.