பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 49

மோசமாகி விடலாம் என்று எண்ணுகிற சந்தர்ப்பத்திலும் தலையாலே பந்தை இடித்து, வேறு பக்கம் அனுப்பி நிலையை சரிகட்டவும்; முனை உதை, மற்றும் தனியுதை கொடுக்கப் பட்டு உதைக்கும் நேரத்தில் பந்தைத் தலையாலே இடித்து இலக்கிற்குள் நுழைத்து வெற்றி எண்ணை’ எளிதாகப் பெறுகின்ற வாய்ப்பினை அடிக்கடி பெறவும் ‘தலையா லிடிக்கும் திறமை பயன்படுகிறது.

முன் நெற்றியால் (Fore head) முட்டி, பந்தை நேரே அனுப்பலாம்; பக்கவாட்டில் (தலை ஓரத்தில்) பந்தை மோத விட்டு மெதுவாகத் தள்ளாமல். தலையை (ஒரு மாதிரியாக) அசைத்துத் திருப்பி) அசைத்து பந்தை சுழற்றி அனுப்பும் எழிலும் பார்ப்பதற்கு இன்பமாக இருக்கும், ஆடுவோருக் கும் நன்றாக இருக்கும்.

உயரமான ஆட்டக்காரர்கள் ஒரு குழுவிலிருந்து, குள்ளமானவர்கள் மறு குழுவிலிருந்து ஆடும் பொழுது, முன்னவர்கள் தலையாலிடித்துப் பந்தைத் தள்ளும் திறமையைச் சிறப்பாகப் பெற்றிருந்தால், குள்ளமான வர்களை ஏமாற்றி (வேடிக்கையாகக் கூட) அவர்களுக்கு பந்தே கிடைக்காதவாறுகூட ஆடமுடியும், ஆகவே, கால் பந்தாட்டத்திற்கு எழிலும், ஏற்றமும், விரைவும் விறு விறுப்பும் தந்து, சிறப்பைக் கொடுப்பது தலையாலிடித்து ஆடும் திறனேயாகும்.

(ஊ) குறியோடு உதைத்தல் (Shooting)

பந்தைத் தடுத்தும், தள்ளியும்; உதைத்தும் வழங்கியும், மார்பில் ஏந்தியும் தலையாலிடித்தும், தாக்கியும் தேக்கியும், ஆடுகளம் முழுதும் ஒடி ஆடி ஆடப்படுகின்ற திறனெல்லாம் இறுதியாக, பந்தை இலக்கிற்குள் தள்ளி வெற்றி எண்ணேப் பெறுவதற்கேயாகும்,