பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

5

0

அதுவுமன்றி, கஷ்டப்பட்டு கொண்டுவருகின்ற பந்தை யெல்லாம்-இலக்கிற்கு வெளியே அடித்து விட்டால் அதல்ை பயனில்லாது போகுமேயன்றி. மீண்டும் வெற்றி பெறுகிற அது போன்ற அரிய வாய்ப்பு கிட்டாமலே

போனுலும் போகும்.

ஆகவே, எட்டடி உயரத்தோடு நிற்கும் குறுக்குக் குச்சியின் கீழே, இருபத்தி நான்கு அடி நீளமுள்ள இரு கம்பங்களுக்கிடையேயுள்ள இடைவெளியுள்ள இலக்கினுள் அடிக்கப்படும் பந்தே, வெற்றி எண்ணைத் தரக்கூடிய தாகும்.

எங்சிருந்தாலும் குறியுடன் இலக்கை நோக்கிப் பந்தை உதைக்கும் நுண்திறன் மிகுதியாக விளையாட்டில் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காகப் பந்தை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்த நிலைப் பந்தை (Stationary ball), நேராக இலக்கை நோக்கி உதைத்து அனுப்புவதும், பந்தை முன்னே உருட்டி ஒட விட்டு அதை வேகமாக உதைத்துத் தள்ளுவதும் (Running ball), எதிராக பந்தை உருட்டிவிட்டு ஓடி வரச் செய்து, அதன் வேத்தோடு வேகமாக இலக்கை நோக்கி உதைத்துப் பழகும் பயிற்சியும் இருந்தால், நாளடைவில் இலக்கிற்குள் குறியுடன் உதைக்கும் சிறந்த திறன் இயல்பாக வந்துவிடும்.

ஆகவே, ஆட்டத்திற்கு வேண்டிய நுண்திறன்களை அறிந்து, அத்திறன்களை வளர்க்கும் வழிகளையும் உணர்ந்து பின்பற்றினால், ஆட்டமும் வளரும். ஆட்டத்திலே எதிர் பார்த்த நல்ல பல பயன்களும் விளையும்.

‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்’ என்பது போல, பழக்கத்தாலும் பயிற்சியாலுமே திறன்களை