பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 53

சாதனைகளை உருவாக்கும் சான்றாேர்களின் திறமையைப் போற்றி, சகல விதமான உதவிகளையும் தந்து, செய்த திறம் வியந்து பாராட்டி ஊக்குவிக்கும் பண்பு தான், அவர்களின் வெற்றியின் ரகசியமாகும். அவர்களின் அளப்பரும் ஆன்ற பணியால், நாடும் வீடும், நல்லவர்கள், அல்லவர்கள் உள்ளமெல்லாம் பயன்பெறுகின்றன. இன்னும்,

மனித இனம் புனிதத் தன்மை பெறவும் வழி வகுக்கிறது.

‘அந்தந்தத் துறையிலே அறிவும் அனுபவமும் உள்ளவர்களைத் தேடிக் கண்டு பிடித்து, ஆதரவு தந்து, தேவையைக் கூறி, வேண்டிய உதவிகளைச் செய்து, ஊக்கு விக்கும் பண்பினுல் புதுமையை நிகழ்த்த முடியும்’ என்ற மொழிக்குச் சான்றாக அமைந்ததுதான் நம்மிடையே சிறப்புற உலவும் கூடைப் பந்தாட்டமும்.

கூடைப் பந்தாட்டம் தோன்றிய நிகழ்ச்சியே ஒரு தேவையின் அடிப்படையில்தான். மக்களின் புதுமை வேண்டும்’ என்று பெருக்கெடுத்தோடிய ஆர்வத்தை நிரப்புவதற்காகவே இந்த ஆட்டம் பிறந்தது.

5.

அமெரிக்காவில் உள்ளுறை விளையாட்டுக் கூடம் (Gymnasium) அதாவது வெயிலாலும், மழையாலும், பனி யாலும், காற்றாலும் இன்னும் இயற்கையால் எழும் இன்னல்களிலிருந்து உடற்பயிற்சியும், ஆட்டமும் தடை படாது இருக்க, மேற்கூரை வசதியுடன் அமைந்து வீடு போன்ற ஒரு பெருங்கூடம் ஆகும். மக்களின் உள்ளங்களிலே மதிப்பையும் சிறப்பையும் பெருத காலம்; அங்கத்தினர் களாக இடம் வகிக்கின்ற சிறுபான்மையினருங் கூட தாங்கள் தொடர்ந்து செய்து, பழகிப் பயன் பெறுகின்ற உடற் பயிற்சி ஆசனங்கள், போட்டியில்லாத தனி நிலைப் பயிற்சிகள், பளு தூக்குதல் (Weight Lifting) கரளே சுற்றுதல், கம்பியின் மீது ஆடுதல் (Bar Activities) போன்றவற்றில் சலிப்பும், வெறுப்பும் கொண்டிருந்த நேரம்; விளையாட்டுத் துறை