பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 57

எளிதாக உள்ளே விழவில்லை. ஏனெனில், ஆட்டத்தின் முக்கிய நோக்கமே கூடைக்குள் (வளை வெனும் இலக்கில்)

பந்தினைப் போட வேண்டும் என்பதே.

அதனுல் குறிபார்த்து எறியப்படும் பந்து எப்பொழு தாவது ஒரு முறை கூடைக்குள் விழும். அதில் விழுந்துவிட்ட பந்தை எடுப்பதற்காக, ஆட்டக்காரர்கள் உயரமான ஏணியைப் பயன்படுத்தி வந்தனர். காலம் மாற மாற, பழக்கமும் முயற்சியும் கூடக்கூட, கூடையுள் பந்து அடிக்கடி விழ ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் ஏணியை எடுத்து வைத்து, பந்தைக் கூடைக்குள்ளிருந்து எடுத்துக் கீழே எறிவதற்கு முயன்றனர். இதனால் நேரம் அதிகமாக வீணுகியதோடு, அவர்களின் உற்சாகமும் உவப்பும் இடை யிடையே அணையிடப்பட்டதால், உண்டாகிய சலிப்பும் பொறுமையின்மையும் அவர்களே அதிக வேதனைக்கு

உட்படுத்தியது.

இந்த வேதனையும் கூடையின் அடிப்பாகம் நீக்கப்பட்ட தால் நீங்கியது. இப்பொழுது கூடையுள் விழுந்த பந்து, கீழ்நோக்கி வேகமாக ஒடி வந்தது. ஆடுவோர் உள்ளமும் மலர்ந்தது. ஆர்வமும் வளர்ந்தது. ஆடுவோர் தொகையும் பெருகியது.

அமெரிக்காவிலே சிறந்து விளங்கிய எஞ்சிய ஆட்டங்க GITT GST 5 T6b Lgi (Foot Ball) 56Tl i Lgi (Base Ba!!) முதலிய ஆட்டங்கள் மழைக் காலம், கோடைக் காலம் மற்றும் காலநிலை மாறுபடும் பொழுதும் ஆடாது நிறுத்தப் பெறும். அப்பொழுது, பொழுது போவதற்காக, அழுது வடியும் சோம்பலைத் தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆட்டம், மற்ற ஆட்டங்களே பெருமையில் வென்று, அன்றே முன்னணியில் நிற்கத் தொடங்கியது. அன்று

வி. வ. வ.-4