பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

போலவே இன்றும் இந்த ஆட்டம் அதிகமாக விரும்பும் மக்களைத் த கத்தே கொண்டு மிளிர்கிறது.

1891ஆம் ஆண்டு கூடைப் பந்தாட்டம் தோன்றியது என்பர் சிலர். 1892ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 20ந் தேதி ஸ்பிரிங்ஃபீல்டு கல்லூரியில் (Spring Field College) விளையாட்டு வகுப்பில் (பாடமாக) சேர்க்கப்பட்டிருப்பதால் 1892ஆம் ஆண்டே இந்த ஆட்டம் தோன்றியது என்பர், இன்னும் சிலர். கால அளவில் வேற்றுமை சிறிதுதா ன் என்றாலும், இந்த ஆட்டம் டாக்டர் நெய்சுமித் அவர்களின் அரும் படைப்பு என்பதை யாரே மறுக்கவல்லார்!

வளர்ச்சி

வயது வந்தவர்களும், இன்னும் சிலரும் முன்னுளில் களிப்பிற்காகவும், பொழுது போக்கிற்காகவும் கூடைப் பந்தாட்டத்தை ஆடினர். இவர்கள் ஆடுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்களும்,தங்களை இதயங்களே ஆட்டத்தின்பால் நழுவவிடலாயினர். வயதானவர்களிட மிருந்த ஆட்டம், கொஞ்சங் கொஞ்சமாக வாலிபர் கைவசப் பட ஆரம்பித்தது.

விளையாட்டு மென்மேலும் பெருகி வளர்வதைக் கண்டு, வாழப் பொறுக்காத பேர்வழிகள் பலர் வாயடித்தவண்ண மிருந்தனர். உடல்திறம் வேண்டும்”, அதற்கு உடற்கல்வி (Physical Education) G5 so su; 91.567 GF696uuuub Lg5xfuqih என்றும் உலகிற்கு வேண்டும்’ என்று இன்றைய உலகம் ஏற்றிப் போற்றுகின்ற இந்தக் காலத்திலேயே விளையாட் டுக்கு வைரிகள் பலர் நிறைந்திருக்கும்பொழுது, அந்தக்

காலத்திலே இல்லாமலா இருப்பார்கள்!

ஆட்டத்தை ஆடுபவர்களே ஆந்தைக் கண்கொண்டு உருட்டி விழித்து நோக்குவதும், வீதியில் நின்றுகொண்டு