பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைப் பந்தாட்டம் 63

பிடித்தது. யார் தவறுக்கு உள்ளாகிருரோ (The man who - ஆs fouled) அவரே தான் ‘தனி எறியை எறிய வேண்டும். வெற்றிகரமாக பந்தை வளையத்திற்குள் எறிந்து விட்டால் வெற்றி எண் அன்றும் ஒன்றுதான். இன்று ஒன்று தான்.

ஆண்டுகள் நகர நகர, ஆட்டம் பெரிதாக பண்பட்ட

நிலையை எய்தி . விளையாட்டில் விறுவிறுப்பையும் உற்சாகத்தையும் உயர்ந்த அளவிலே ஊட்டுகின்ற நிலைக்கு, விதிகள் ஆட்டத்தைச் செம்மையாக்கின. ஆட்டமும்

உலகெங்கினும் பரந்து விரிந்து ஆல்போல் தழைக்கத் தொடங்கியது. மக்களும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர்.

ஆகவே, ஆட்டத்தை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களில் (Olympic games) ஒன்றாக இணைக்க முயற்சிகள் நடந்தன. 1904ஆம் ஆண்டு செயிண்ட் லூயிசில் (St.Louis) நடந்த ஒலிம்பிக் பந்தயத்திலும், 1924ஆம் ஆண்டு பாரிசில் (Paris) நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் ஆடிக் காண்பிக்கப் பட்டது. அதில் ஆடிய ஆட்டக்காரர்களும் சிறந்த முறையில் ஆடியதற்காகப் பாராட்டப் பெற்றனர்.

-

பின்னர் 1936ஆம் ஆண்டு அகில உலகக் கூடைப் பந்தாட்டக் கழகம் (F.1.B.A) தோன்றியது. இக்கழகத்தின் இடைவிடா முயற்சியால் 1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூடைப்பந்தாட்டம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு ஆட்டமாக இணைக்கப்பெற்றது. அதன் பிறகு 1936ஆம் ஆண்டு பெர்லினில் (Berlin) நடந்த ஒலிம்பிக் போட்டியில், முதன் முதலாக அமெரிக்கா வென்றது. d35 GTT L T வெற்றியைத் தொடர்ந்தது. (Runners up).

இந்தப் போட்டி விளையாட்டைக்கான கூடைப் பந்தாட்டத்தின் தந்தை டாக்டர் தெய்சுமித் அவர்கள் வருகைதந்து, காட்சியைக் கண்டு பேருவகை எய்த ர்.