பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆடுகளத்திற்கு உள்ளே எறிய வேண்டும். இதைக் காலம் கழிக்காது உடனே செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் வளையத்திற்குள் பந்து விழுத் தால் 2 வெற்றி எண்கள் தரப்படுகிறது. ஆட்ட நேரத்தில் பந்து வளையத்திற்குள் விழுவதால் இதற்குக் கள வெற்றி எண் (Field Goal) என்று பெயர். இதற்குத் திறமையும், நல்ல சாதுரியமும் தேவையாகும். எதிர்க் குழுவினர் இழைத்தத் தவறுக்காக (Foul) தனியே, தடையேதுமின்றி எறியப்படும் தனி எறி’க்கு (Free throw) வளையத்தினுள் பந்து விழுந்தால் ஒரு வெற்றி எண் கிடைக்கும். இதற்குத் தனி எறி வெற்றி எண் (Free throw Goal) என்று பெயர்.

ஆட்டத்தின் மொத்த விளையாட்டு நேரம் 40 நிமிடங்கள். 20 நிமிடங்கள் ஒவ்வொரு பகுதிக்குமாக (Half) இரண்டு பகுதிகள் உண்டு. இடைவேளை நேரம் 10 நிமிடங்கள். ஆட்டத்தின் மொத்த நேரத்தின் இறுதியில் அதிகமான வெற்றி எண்களைப் பெறுகின்றவரே வெற்றி பெற்றவராவார்.

இறுதியில் இருவரும் சமமான வெற்றி எண்கள் பெற்றிருந்தால், 5 நிமிட மிகை நேரம் (Extra Time) கொடுத்து ஆடச் செய்ய வேண்டும். இதிலும் வெற்றி நிர்ணயிக்கப் படாவிட்டால் 5 நிமிட இடை வெளிக்குப் பிறகு, 5 நிமிடங்கள் கொண்ட மிகை நேரமாகத் தந்து ஆடச் செய்ய வேண்டும். *

முதல் தடவை தொடங்கும் மிகை நேரத்திற்கு மட்டும் நாணயத்தை சுண்டியெறிந்து பக்கத்தைத் (Side) தெரிந் தெடுக்கச்செய்து பின்தொடர்ந்து வரும் மிகைநேரத்திற்கு, குழுக்களை மட்டும் பக்கத்தை மாற்றிக் கொள்ளச் செய்ய வேண்டும். ஒய்வு நேரம் (Time Out) குழுத் தளபதியாலோ அல்லது குழுத் தலைவராலோ (Team