பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

5. முன் பகுதியில் (Front Half) இருக்கும் தடுக்கப் LL.L. 3565f GTs) argvv(56ir (Restricted free Throw Area) தன்னுடைய குழுவினரின் கையில் பந்திருக்கும் பொழுது, 3 விடிைக்கு மேல் நின்று கொண்டிருக்கக் கூடாது. ஆனல் தன் கையில் பந்திருக்கும்போது மட்டுமே நிற்கலாம்.

6. பந்தை உள்ளெறியும் போது 5 வினடி நேரத்திற் குள்ளே எறிந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

7. ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பந்தைப் பிடிக்க லாம்; எறியலாம்; வழங்கலாம்; பந்துடன் ஒடலாம்: எங்கிருந்து வேண்டுமானலும் ஆடுகளத்திற்குள் நின்று பந்தை வளையத்திற்குள் எறிந்து வெற்றி எண் பெறலாம். ஆனால், கோட்டிற்கு வெளியே நின்று பந்தை ஆடக்கூடாது.

8. எதிர்க் குழுவினரை வேண்டுமென்றே இடிப்பதோ அவர்மேல் ஏறிக் குதிப்பதோ. இடையில் குத்துவதோ, காலை இடறி விடுவதோ. மற்றும் வேண்டாத வேலைகளைச் செய்வதோ கூடாது.

சில தவறுகள் (Fouls)

F1, j,5 (Personal Contact)

85 x 46 பரப்பிற்குள்ளே, பத்து ஆட்டக்காரர்கள் ஒரு பந்தைத் தன்னிலைக்கு எடுத்துக் கொள்ள முயலும் போதும், அதைத் தடுக்க மற்றவர் விழையும்போதும், உடல் தொடர்பும், இடித்துக் கொள்வதும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டுமென்றே மற்றவர் மேல் இடித்தல், விழுதல் முதலிய குற்றங்களைச் செய்தல் கூடாது, -

இந்தத் தவறுகளை செய்யாதபடி ஆட்டக்காரர்கள் ஆடவேண்டும். மீறி அவர்கள் நடந்தால், குற்றத்தைச்