பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

அதிகமாகப் பயன்படுகிறது. பந்தோடு வரும் எதிரியைத் தடுக்க குறுகிய இடைவெளியுள்ளபடி கால்களை வைத்து முன்னும் பின்னுமாக, பக்கவாட்டில் நகர்த்தக்கூடிய சக்தியும் திறமையும், கால்களின் சக்தியினலே செய்யக் கூடும். கால்களின் அசைவிலே சுழல் தப்படி (Pivot) செய்ய இன்னும் அதிகமாக உதவுகிறது.

2. Fypsi) 35LILA (Pivoting)

பந்துடன் முன்னேறும் பொழுது எதிர்க் குழுவினர் தடுப்பர். அவர்களை ஏமாற்றிச் செல்லவும், அப்படி ஏமாற்றி முன்னேற முடியாத நிலையிலும் பந்தை வளையத்தை நோக்கி எறிய முடியாத நிலையிலும் பந்தைத் தன் குழுவினருக்கு எறியவும் வழங்கவும், தட்டிக்கொண்டு ஒடவும் ஏற்றவாறு கால்களை நிலைப்படுத்திக் கொள்ளும் அசைவுக்கு சுழல் தப்படி என்று பெயர்.

பந்தை எதிரிகளிடமிருந்து காப்பதே இதன் முக்கிய நோக்கம். அதாவது பந்திற்கும் எதிரிக்கும் இடையில் தன்னை நிறுத்திக் கொண்டு பந்தைக் காப்பதுதானுகும். ஒரு கால் நிலையாகவே இருக்க, மறுகாலை வசதியான நிலைமையில் மாற்றிக் கொள்ள, சுழற்றும் முறையில் வைத்துக் கொள்வதே சுழல் தப்படியாகும்.

நிலையாக வைத்திருக்கும் ஒருகாலை பெயர்த்தெடுக்காமல் அவர் எத்தனை தடவையேனும் மறுகாலைப் பெயர்க்கவோ சுழற்றவோ, வட்டம் போடவோ செய்யலாம். இதில் எப்பொழுதும் ஒரு சிக்கல் எழுவது இயற்கை. நிலையான கால் (அச்சுப் போன்றது) (Pivot foot) எது? நகரும் கால் (Rear foot) GT52 GT63rl 1515srat.

பந்தைப் பிறரிடமிருந்து தன் கைகளில் பெறும்பொழுது ஒருவர் இரு கால்களையும் தரையில் வைத்திருந்தபடி