பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 99

)அதிகாரிகள் (officials -- . 1

1.நடுவர், 1 துணை நடுவர். இவர்கள் இருவருக்கும் துணையாக 1 நேரக் காப்பாளர் (Time Keeper) 1 குறிப்பாளர், 1-28 விநாடிக் கண்காணிப்பாளர் இருந்து, ஆட்டத்தை நடத்துகின்ற பணியைச் செய்வார்கள். - -

ஒரு ஆட்டத்திற்காக வந்துள்ள நடுவர், போட்டியில் பங்கு பெறுகின்ற ஏதாவது ஒரு நிறுவனத்தின் சார்பாக எந்தவிதத்திலும் இருந்து வந்திருக்கக் கூடாது என்பதை வன்மையாக வற்புறுத்த முடியாது. ஆனால், அவர்கள் முழுவதும் தகுதியுள்ளவர்களாகவும், பாரபட்சமற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் இந்த விதிகளைத் தவிர மற்ற மாற்றங்களை ஒப்புக் கொள்வதற்கு உரிமையே கிடையாது. இரு குழுக்களும் அணிந்துள்ள ஆடை களுக்கு மாறுபட்ட வண்ணமுள்ள ஆடையை அவர்கள் அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சாம்பல் நிறமுள்ள (Grey) நீண்டகால் சட்டைகளையும், சட்டைகளையும் கூடைப்பந்துக்கு அல்லது டென்னிசுக்கு அணியும் காலணிகளையும் (Shoe) அணிந்து கொள்ள வேண்டும். -

விளையாட்டு சாதனங்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டு (Inspect) நடுவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் ஆட்டத்திற் கான மணிப்பொறியை ஏற்பதுடன், அதை இயக்கும் நேரக் காப்பாளரையும் அங்கீகரிக்க வேண்டும். ஒருவர் அணிந்திருக்கும் பொருட்கள் மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நடுவர் கருதினால், அவைகளை அணிய அவர் அனுமதிக்கக் கூடாது.

குறிப்பாளருடைய சைகை ஒலி, மற்றவர்களது அல்லது நேரக்காப்பாளருடைய சைகை ஒலிகளுக்கு மாறுபட்டதாக இருக்க வேண்டும். நடுவரின் கடமைகள்

விதிகளில் குறிப்பிடப்படாத எல்லா நிலைகளிலும் கூட, நல்லதொரு முடிவை எடுக்க நடுவருக்கு அதிகாரமுண்டு.

ஆடுகள மையத்திலிருந்து பந்தை உயர்த்தி எறிந்து நடுவர் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார். மற்றத் துணை நடுவர்கள் வளையத்தினுள் பந்து சென்றதா என்பதில் கருத்து மாறுபாடு கொள்ளும் பொழுது, அவர் அதற்கொரு முடிவெடுப்பார். நிலைமை சரியில்லாத பொழுது நேரக்காப்பாளரும் குறிப்பாளரும் தங்களுக்குள்