பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

மாறுபடும் பொழுது அவர் அதில் முடிவெடுப்பார். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் ஒவ்வொரு மிகை நேரப் பகுதியின் முடிவிலும் ஆட்டக் குறிப்பேட்டை (Score Book) சோதனை செய்து, வெற்றி எண்களின் கணக்கைத் தெரிந்து சம்மதம் அளிப்பார். இவருடைய அனுமதியுடன் ஆட்ட நேரம் முடிவுறும் பொழுது, ஆட்டத்தில் பங்குபெற்ற அதிகாரிகளின் தொடர்பும் முடிவடைகிறது.

9. ஆட்ட அதிகாரியின் கடமைகள்

1. நடுவர் - துணை நடுவர்

விதிகளுக்குட்பட்டு ஆட்டத்தை நடத்திக் கொடுப்பது நடுவர்,

துணை நடுவர்களின் கடமையாகும். அவை வருமாறு:

பந்தை விளையாட்டில் இடுதல், எப்பொழுது பந்து நிலைப் பந்தாக மாறுகிறது என்பதைத் தீர்மானித்தல், தேவைப்படும் பொழுது விசிலால் அதை நிறுத்தல், நிலைப்பந்தான பிறகு தொடர்ந்து வரும் செயலை விசிலால் தடுத்தல், தண்டனைகளை நிறைவேற்றுதல், ஓய்வு நேரத்திற்கு உத்தரவளித்தல், மாற்றாட்டக் காரர்களை ஆடுகளத்தினுள் அனுமதித்தல், விதிகளின்படி எல்லைக்கு வெளியேயிருந்து உள்ளெறியும் ஆட்டக்காரருக்குப் பந்தை வழங்குதல், சரியான முறைப்படி விநாடிகளை திறமையாகக் கணக்கிட்டு ஆட்டத்தை நடத்துதல் முதலியன.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஆடுகளத்தைதங்களுக்கென இரண்டாகப் பகுத்துக் கொண்டு கண்காணிப்பாளர்கள், தவற்றை தொடர்ந்து வரும் தனிஎறி தண்டனையின்போது இருவரும் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்வார்கள்.

(e) L16&TLsop Gluo,6flo (Unsportsmanlike conduct) ஈடுபடும் ஆட்டக்காரர்களை, பயிற்சியாளரை, மாற்றாட்டக்காரரை மற்றும் குழுவை ஆதரிப்பவர்களை முறையாகத் தண்டிப்பது அவர்களின் கடமையாகும். படுமோசமான நடத்தையுள்ளவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஆடுகளத்திலிருந்தே நீக்கி விடுவதோடல்லாமல், தவறுக்கு உடன் செல்கிற யாரையும் ஆட்ட நேரத்திற்கு அங்கு வராமலே தடுத்துவிடவேண்டும்.

(ஆ) தீங்கு நேர்கிறபோது, ஓய்வு நேரம் கேட்க நடுவர்களுக்கு உரிமை உண்டு. ஆட்டக்காரர்கள் காயமுற்ற பொழுதாவது அல்லது மற்ற எந்தக் காரணத்திற்காவது நடுவர்கள் ஓய்வு நேரம் கேட்கலாம். ஆனால், சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்காக (Trifles) கேட்கக்