பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 101

கூடாது. ஆட்டம் நடந்து கொண்டு இருக்கும்பொழுது ஏதாவது தீங்கு நேர்ந்துவிட்டால், ஆட்டம் அதாகவே நிற்கும் (Complete) வரை, நடுவர்கள் விசிலைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும்.

ஆட்டம் நிற்பதென்பது, ஒரு குழு தன் வசமுள்ள பந்தை வளையத்தை நோக்கி எறிவது அல்லது பந்தை தன் வசமிருந்து இழப்பது அல்லது ஆட்டத்திலிருந்து பந்தைப் பிடித்துக் கொள்வது அல்லது பந்து நிலைப் பந்தாக மாறுவது அல்லது பந்து எல்லைக்கு வெளியே செல்வது என்பதில் ஒன்றாகும்.

காயமுற்றவருக்கு உடனே தேவையானவற்றைச் செய்ய வேண்டுமென்றிருந்தால், நடுவர் ஆட்டத்தை உடனே நிறுத்தி விடலாம். காயம்பட்ட ஆட்டக்காரர் நிகழ்ச்சி ஏற்பட்ட ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால், அவருக்குப் பதிலாக மாற்றாட்டக்காரர் வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ளலாம். அவருக்காக வந்த அந்த மாற்றாட்டக்காரர், முன்னவருக்காகத் தரப்பட்டத் தனி எறிகளை எடுக்கத் தகுதியுள்ளவராகிறார்.

(இ) நடுவர்கள் இருவரும் ஒத்துப்போதல் என்பது, மேலே விதிகளில் கூறப்பட்டுள்ள கடமைகளின்படி இருவரும் செயல்பட வேண்டும். எந்த நடுவரும அவருக்கான பகுதியில், மற்றவர் எடுத்த முடிவுகளைப் பற்றிக் கேள்விகளை எழுப்பவோ அல்லது ஒரு பக்கமாக அவைகளை மாற்றி அமைக்கவோ முயலக் கூடாது. அதற்கு அதிகாரம் கிடையாது.

இரண்டு நடுவர்களும் ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் ஒரு விதிமீறலைப் பற்றி முடிவெடுக்கும் பொழுது, அந்த முடிவு பலவகையானத் தண்டனைகளைத் தருமானால் அவைகளில் கடுமையான தண்டனை எதுவோ, அதையே, செயல்படுத்த வேண்டும். இது முன்னே கூறப்பட்ட இரட்டைத் தவறென்றால், ஒன்றும் செய்ய முடியாது.

(ஈ) முடிவெடுக்கும் காலமும் இடமும் எல்லைக்குள்ளே ஆயினும், வெளியேயாயினும் விதிகளை மீறும் தவறு எங்கு நடந்தாலும் சரி, அதைப்பற்றிய முடிவெடுக்க முழு அதிகாரமும் நடுவர்களுக்குண்டு. அந்த அதிகாரம் ஆட்டம் தொடங்குகின்ற நொடியிலேயே தொடங்கி, ஆட்டம் முடிவடையும் பொழுது முடிவடைகிறது. இன்னும் ஏதாவது சில காரணங்களினால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் பொழுதும் அவரது அதிகாரம் செல்லுபடியாகும்.