பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விளையாட்டுக்களின் விதிகள்

(உ) தவறுகளைக் குறிப்பிடுதல் - தவறிழைத்தவர் மேல் தவறு சுமத்துகின்ற நடுவர், அந்த ஆட்டக்காரரின் ஆடும் எண்ணைத் தன் கைவிரலால் குறிப்பிட்டு குறிப்பாளருக்குக் கூற வேண்டும். இவ்வாறு சுட்டிக்காட்டப்படுகின்ற ஆட்டக்காரர், குறிப்பாளரிடம் தன் கையை உயர்த்திக் காட்ட வேண்டும். இதுபோன்று செய்யத் தவறியவரை, ஒருமுறை எச்சரிக்க வேண்டும். மீண்டும் செய்யத் தவறினால், அவர் மீது தனிநிலைத் தவறை சுமத்த வேண்டும். அது தனியார்தவறென்றால் தண்டனையாகத்தருகின்றதனி.எறியைத்தன் கைவிரலால் எத்தனை என்று நடுவர் காட்ட வேண்டும். இன்னும், அந்தத் தனி எறியாளரின் ஆடும் எண்ணையும் குறிப்பிடவேண்டும். அவ்வாறு தனி எறித் தண்டனைத் தராவிடில், எல்லைக்கு வெளியேயிருந்து உள்ளெறியும் ஆட்டக்காரர் வசம் பந்தைத் தருதல் வேண்டும்.

ஆட்டக்காரர், பயிற்சியாளர், மாற்றாட்டக்காரர் அல்லது குழுவின் ஆதரவாளர் இவர்களில் யாராவது ஒருவர் பண்பாடில் லாமல் நடந்து கொண்டால், அவர்களை ஆட்ட அதிகாரிகள் தண்டிக்கலாம். அவர்கள் மீண்டும் அதே தவற்றைச் செய்தால், அவரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றலாம். அதேபோல் மறுமுறை பண்பாடில்லாமல் நடந்து கொள்ளும் மாற்றாட்டக்காரர், பயிற்சியாளர், குழுவின் உதவியாளர் அல்லது ஆதரவாளர் இவர்களையும் அங்கிருந்தே வெளியேற்றலாம்.

2. வெற்றி எண் குறிப்பாளர் (Scorer)

ஆடும் நேரத்தில் வளையத்தினுள் பந்து விழுந்து பெறுகிற கள வெற்றி எண்களையும், தனி எறியில் பெறுகிற வெற்றி எண் களையும், அதில் தோல்வியுறுவதையும், 6.25 மீட்டர் வட்டத்திற்கு வெளியேயிருந்து எறிகிற எறியில் பெறுகிற வெற்றி எண்களையும் இன்னும் ஆட்டநேரம் முழுவதும் தொடர்ந்து பெற்றுவரும் வெற்றி எண்களையும் குறிப்பேட்டில் குறித்துக் காட்ட வேண்டியது குறிப்பாளரின் (Scorer) கடமையாகும்.

ஒவ்வொரு ஆட்டக்காரருக்குத் தரப்படுகிற தனியார் தவறுகள், தனிநிலைத்தவறுகளைக் குறிப்பதுடன் 5 முறை தவறைப்பெறுகின்ற ஆட்டக்காரரைப் பற்றி, உடனடியாக நடுவருக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் எடுத்திருக்கிற ஓய்வு நேரங்களைக் குறிப்பதுடன், அந்தந்தக் குழுவையும் அதன் பயிற்சியாளரையும், ஒவ்வொரு பருவத்திலும் 2-வது முறை ஓய்வு நேரம் கேட்கும் பொழுது நடுவரின் மூலம் எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.