பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 103

முதன் முதலில் ஆட்டத்தில் இறங்கி விளையாடுகின்ற ஆட்டக்காரர்களின் பெயர்களையும், இறங்கி விளையாடவிருக்கும் எல்லா மாற்றாட்டக்காரர்களையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். விதிமீறல் நடந்து அதைக் கண்டுபிடிக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து ஆடுகிற ஆட்டக்காரர்களையும் அல்லது மாற்றாட்டக்காரர்களையும் முன்னிலைப்படுத்தும் நேரத்தில், ஆட்ட நேரத்தில் பந்து நிலைப்பந்தானது என்பதையும், உடனே அருகிலுள்ள நடுவருக்கு கூறவேண்டும்.

குறிப்பாளர் எழுப்புகின்ற சைகை ஒலியால் (Sign) ஆட்டம் நின்றுவிடாது. பந்து நிலைப்பந்தான உடனேதான், தனது குறிப்பொலியை முறைப்படி எழுப்ப வேண்டும் என்பதை அவர் மறக்கக் கூடாது.

3. G157 smLumstrff (Time-keeper)

ஒவ்வொரு பருவமும் தொடங்குகின்ற நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்கு 3 நிமிடங்களுக்கு முன்னதாகவே நடுவருக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதுான், அந்தப் பருவத்தைத் (Half) தொடங்கவும், குழுக்களை எச்சரிக்கவும் அல்லது அவர்களை ஆடத் தயாராக இருக்கச் செய்யவும் ஏதுவாக இருக்கும்.

ஆட்டம் தொடங்க இருக்கும் நேரத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்னதாகக் குறிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். அவர் ஆட்ட நேரத்தையும், விதிகளின்படி ஆட்டம் நிறுத்தப்படுகின்ற நேரத்தையும் குறித்து, வைத்துக் கொள்ள வேண்டும்.

பருவத்தின் ஆரம்பத்திலாவது அல்லது மிகை நேரப் பகுதியிலாவது ஓய்விற்குப் பிறகு வரும் பந்துக்காகத் தாவலினால் ஆட்டம் தொடங்குகிற நேரத்தில், தூக்கி உயரத்தில் எறியப்படும் பந்து அதன் உயர உச்சநிலையை அடைந்து இறங்கி வருகையில், முதன் முதலாக ஒரு ஆட்டக்காரரால் தட்டப்படும் பொழுது ஆட்ட மணிப்பொறி (Game Watch) ஓடத் தொடங்குகிறது. ஓய்வு நேரம் அல்லது எல்லைக்கு வெளியேயிருந்து உள்ளெறிதல் அல்லது தனி.எறி மூலமாக ஆட்டம் தொடங்குகிற நேரத்தும், ஆட்ட மணிப்பொறி ஓடத் தொடங்கும். அவ்வாறு எறியப்படும் பந்தானது ஆடுகளத்தில் உள்ள ஆட்டக்காரரைத் தொட்டது அல்லது பந்து வளையத்திற்குள் செல்லவில்லை என்று தெளிவான பின்னும், எல்லைக்கு வெளியே பந்து செல்லாமல் உள்ளேயே இருக்கிறது என்ற நடுவரின் சைகைக்குப் பிறகும் மணிப்பொறி ஓடத் தொடங்குகிறது.