பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ().” விளையாட்டுக்களின் விதிகள்

ஒவ்வொரு பருவத்தின் ஆட்டநேரம் முடிவடைகிற பொழுதும்; தவறு என்றும், ஓய்வு நேரம் என்றும் பந்துக்காகத் தாவும் நேரத்தில் நடுவர் ஒரு முடிவு எடுக்கிறார் என்கிற பொழுதும்; ஆட்டமணிப்பொறி நிறுத்தப்படும். ஓய்வு நேரம் கேட்டபின், ஓய்வு நேரத்தைப் பார்ப்பதற்காக உள்ள மணிப்பொறிகளை ஓடவிடும் நேரக்காப்பாளர், ஆடுவதற்கான நேரம் வந்துவிட்டதென்பதைக் குறிப்பாளரிடமும் கூறி, அவர் மூலம் நடுவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பருவத்தின் அல்லது மிகை நேரப் பகுதியின் நேரம் முடிவுற்றது என்பதைத் துப்பாக்கி (Gun) அல்லது கைத்துப்பாக்கி யாலோ (Pistol) அல்லது கைமணியாலோ ஒலியெழுப்பிக் காட்டலாம். இந்த சைகை ஒலி சப்தமிடத் தவறினாலோ அல்லது கேட்கப்படாவிட்டாலோ, அவர் உடனடியாக ஆடுகளத்தினுள் சென்றோ அல்லது வேறு எந்த வழியிலாவதோ அதை நடுவருக்கு அறிவிக்க வேண்டும். இந்த இடைநேரத்தில், வளையத்தினுள் பந்து விழுந்து வெற்றி எண் எடுத்திருந்தாலோ அல்லது தவறு எதுவும் நிகழ்ந்திருந்தாலோ, அதற்காக நடுவர் நேரக் காப்பாளரையும் குறிப்பாளரையும் கலந்தாலோசித்தே முடிவு கூற வேண்டும். நேரம் முடிவுற்ற பொழுதுதான், மேலாக வந்த பந்து வளையத்தினுள் விழுந்தது அல்லது தவறு இழைக்கப்பட்டது என அவர்கள் இருவரும் கூறினால், அதற்கு வெற்றி எண்கள் இல்லை என்றும், அல்லது பண்பற்ற செயலைத் தவிர, அது சாதாரணமானத் தவறாக இருந்தால், அது புறக்கணிக்கப்பட்ட ஒன்று எனவும் நடுவர் அறிவித்துவிடுவார்.

இருவரும் கருத்து வேறுபாடுகொண்டிருந்தால், நடுவர்தானாக அந்த விதியை மாற்றலாம் என்றிருந்தாலொழிய வெற்றி எண்களைக் கொடுக்கலாம், அல்லது தவறுக்குத் தண்டனை அளிக்கலாம்.

தேவையான நேரத்தில் ஒரு முடிவை அறிவிக்கும்பொழுதுதான், விசிலை நடுவர்கள் பயன்படுத்த வேண்டும். களவெற்றி எண்ணுக்குப் பிறகு விசிலை அடிக்கக் கூடாது. ஆனால் வெற்றி எண் அடைந்தது என்பதை முறையான சைகை மூலம் குறிப்பாளருக்குக் காட்ட வேண்டும்.