பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 111

செய்யப்பட்டக் காலணிகள் (Shoe) எல்லா ஆட்டக்காரருக்குமுரிய சீருடைகளாகும்.

ஊறு விளைவிக்கக்கூடியனவான தலையிலணியும் அணிகலன் (Head Gear) நகைகள், குண்டுசிகள், காப்புகள் போன்ற உலோகப் பொருட்களை, ஆட்ட நேரத்தில் ஆடுவோர் யாரும் அணிந்திருக்கக் கூடாது.

ஆட்ட எண்களாக 1 முதல் 18 எண் வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆட்ட எண்களை, ஆடுகிற எல்லோரும் தங்கள் சட்டையின் முன்பக்கம் 15 சென்டிமீட்டர் உயரம் 2சென்டி மீட்டர் அகலம் பின்புறமும் 20 சென்டி மீட்டர் உயரமும் 2 சென்டி மீட்டர் அகலமும் தைத்து அணிந்திருக்க வேண்டும்.

அகில உலகப் போட்டிகளில், குழுத் தலைவன் தன் சட்டைக்குரிய நிறத்திலிருந்து, வேறுபட்ட ஒரு நிறத்தில் தனது சட்டையின் இடப்பக்கத்து மார்புப் பகுதியில் 8 x 2 சென்டி மீட்டர் பரப்புள்ள ஒரு அடையாளச் சின்னத்தை (Badge) அணிந்திருக்க வேண்டும்.

ஆடுகளத்திற்கு வரும் எல்லா ஆட்டக்காரர்களும், நல்ல அழகான உடையுடன் ஒரே வண்ணமுள்ளதாக அணிந்திருக்க வேண்டும். குளிர்காலமாக இருந்தால், பயிற்சியின் போது அணிந்திருக்கும் உடையையே போட்டுக் கொள்ளலாம்.

ஒரு குழுவின் வேண்டுகோளின்படி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டக்காரர்களை, ஆட்டக் காலணி இல்லாமல் வெறுங்காலுடன் ஆட நடுவர் அனுமதிக்கலாம்.

3. குழு அமைப்பும், மாற்றாட்டக்காரர் மாற்று முறையும் 1. குழு அமைப்பு (Team)

ஒரு குழுவின் ஆட்டக்காரர்கள் - தங்களது சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் சரி, ஒரு குழுவில் 6 பேருக்குக் குறையாமல் (ஆட்டக்காரர்கள்) ஆடுகளத்தினுள் இருக்க வேண்டும். ஆடுவோரும் மாற்றாட்டக்காரருமாக ஒரு குழுவில் மொத்தம் 12 பேர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. பந்தை எடுத்தாடுவதில் (Defence) சிறப்பான திறமை பெற்றிருக்கும் ஒரு விளையாட்டு வீரர்