பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2 விளையாட்டுக்களின் விதிகள்

லிப்ரோ என்று உட்படுத்தலாம். பன்னிரெண்டு நபர்களுள் லிப்ரோ ஆட்டக்காரரும் ஒருவராக கருதப்படுவார்.

ஆட்டம் தொடங்கும் முன், ஆட்டக்காரர்கள் மற்றும் மாற்றாட்டக்காரர்களின் பெயர்களை ஆட்டக் குறிப்பேட்டில் (Score sheet) எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு எழுதப்படாத ஆட்டக்காரர்கள், ஆட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

மாற்றாட்டக்காரர்களும் (Substitutes) பயிற்சியாளரும், நடுவருக்கு எதிரே உள்ள ஆடுகளத்தின் ஒரு பக்கத்தில் (Side) இருக்க வேண்டும். மாற்றாட்டக்காரர்கள் ஆடுகளத்திற்கு வெளியே உடலைப் பதமாக்கும் (Warm up 3 x 3m) பயிற்சியினை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு பிறகு, அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு உடனே வந்துவிடவேண்டும்.

3. LomibgplOpsop (Subsitution)

ஓய்வு நேரத்தில் (Time-out) ஆட்டக்காரர்களை மாற்றிக் கொள்ள (Substitutions) நடுவரிடமோ அல்லது துணை நடுவரிடமோ (தனித்தனியே) அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெறும் அனுமதியை, குழுத் தலைவன் அல்லது குழுப் பயிற்சியாளர்தான் கேட்கலாம். ஒரு ஆட்டக்காரரையோ அல்லது பல ஆட்டக்காரர்களையோ ஒரே சமயத்தில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதை 30 விநாடிக்குள் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் செய்யத் தவறினால், மீண்டும் ஒரு முறை ஓய்வு நேரம் கேட்டுக் கொண்டதாகக் கொள்ளப்பட்டு, அடுத்த ஓய்வு நேரத்தையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை ஆட்டத்தில் (Game) ஒரு குழு, அதிக அளவு 6 தடவைகள் மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ள முடியும்.

குறித்த நேரத்திற்குள் ஆட்டக்காரர்களை மாற்ற முடியாமல் போன பிறகு, இனி மறு ஓய்வு நேரமும் இல்லை என்ற நிலைமையில், அக்குழு ஆட்டக்காரர்களை மாற்றும் வரை ஆட்டம் நிறுத்தப்படும். ஆனால் காலம் தாழ்த்தியக்குழு வெற்றி எண் குறைக்கப்படுவதோ அல்லது அடித்தெறியும் வாய்ப்பை இழப்பதோ (Service) போன்ற தண்டனையைப் பெறும். ஆட்டக்காரர்களை மாற்றுவதற்கு அனுமதி பெறும் குழுத் தலைவன் அல்லது குழுப் பயிற்சியாளர் ஆடுவதற்கு உள்ளே வரும் ஆட்டக்காரர்களையும் வெளியே செல்லும்