பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விளையாட்டுக்களின் விதிகள் >

(அ) பொதுவாக ஆட்டம் தொடங்குவதற்கு முன், ஆடுகளத்தின் பக்கம் அல்லது அடித்தெறியும் வாய்ப்பு என்பதில் ஒன்றை நிர்ணயிக்க, நாணயம் சுண்டி (Toss) எறியப்படும். அதில் வெற்றி பெற்றக் குழுத் தலைவன் விரும்பியதைக் கேட்க குழுக்கள் அவரவர்க்குரிய இடங்களில் போய் நின்று கொள்ள வேண்டும். சர்வீஸ் போடுகிற வாய்ப்பா அல்லது ஆடுகளத்தின் ஒரு பக்கமா, என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய நாணயம் சுண்டுவதில் வெற்றி பெற்றவருக்கு உரிமை உண்டு.

(ஆ) அடுத்தக் குழுவினர் பந்தை அடித்தெறியும் நேரத்தில் (Service) எல்லா ஆட்டக்காரர்களும் அவரவர்க்குரிய இடத்தில் நிற்க வேண்டும். அவர்கள் (ஒரு குழுவினர்) இரண்டு வரிசையாக நிற்க வேண்டும். ஆனால் அந்த வரிசை நேர்க்கோட்டைப் போன்று

ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதில்லை.

(இ) வலைக்கு அருகில் உள்ள மூவரும் முன்வரிசை ஆட்டக்காரர்கள் (Front Line Players) என்றும், மற்ற மூவரும் பின்வரிசைஆட்டக்காரர்கள் (BackLine Players) என்றும் அழைக்கப் படுவார்கள். ஆட்டம் தொடங்கும் பொழுது அவர்களின் நிலை, வலமிருந்து இடம் 2, 3, 4 முன்வரிசையினர்1, 6, 5 பின்வரிசையினர்.

(ஈ) அடித்தெறிந்த ஆடுகளத்தில் விழுந்து ஆட்டம் தொடங்கியவுடன், ஆட்டக்காரர்கள் தங்களுடைய ஆடுகளப் பக்கத்தில் எந்த இடத்திலேனும் நின்று ஆடலாம். சர்வீஸ் போடுகிறபோது சரியான இடங்களில் நிற்காமல் எதிர்க்குழுவினர் இருந்தால் எதிரணி வெற்றி எண் வாய்ப்பை அலலது ஆடுகிற வாய்ப்பை இழக்கும். அதன்பின் அவர்கள் தங்கள் சரியான

இடங்களுக்கு வந்துவிடவேண்டும்.

(உ) ஒவ்வொரு முறை ஆட்டம் (Set) முடிகிற வரைக்கும் குறிப்பேட்டில் உள்ள சுற்றுமுறை (Rotation Order) வரிசை கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும்.

(ஊ) ஒவ்வொரு முறை ஆட்டத் தொடக்கத்திலும், சுற்று முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால், அந்த மாற்றம், ஆட்டக் குறிப்பேட்டில் முன்னரே குறிக்கப்பட வேண்டும்.

(எ) ஒவ்வொரு தடவையும் முறை ஆட்டம் முடிந்த பிறகு, குழுக்கள் இரண்டும் தங்களின் பக்கங்களை (Sides) மாற்றிக் கொள்ள வேண்டும்.

(ஏ) முடிவெடுக்கும் முறை ஆட்டத்திற்கு முன் (Decisive Set) நாணயத்தை சுண்டியெறிந்து, அதன் மூலம் குழுக்களுக்கு ஆடுகளப்