பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 115

பக்கங்களையும் அடித்தெறியும் வாய்ப்பையும் கொடுத்து நடுவர் ஆட்டத்தைத் தொடங்குவார்.

(ஐ) கடைசி முறை ஆட்டத்தில் (Last Set) இரு குழுக்களும் சமமாக இருந்து, அதில் ஒரு குழு மொத்தத்தில் 8 வெற்றி எண்கள் எடுத்திருக்கும் பொழுது, இரு குழுக்களும் தங்கள் பக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றும் பொழுது ஆட்ட நிலை எவ்வாறு இருந்ததோ, அதே ஆட்ட நிலையில்தான் அடித்தெறியும் வாய்ப்பும் தொடர்ந்து இருக்கும்.

மேலே குறித்த நிலையில் குழுக்கள் தங்கள் பக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் தவறிவிடுகிற பொழுது, நடுவர் அல்லது குழுத் தலைவர்களில் யாராவது ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், பக்கங்களின் மாற்றம் உடனே நிகழ்ந்துவிட வேண்டும். மாற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த வெற்றி எண்கள் அதே நிலையிலிருந்து தொடரும். வேறுமாற்றம் எதுவும் நிகழாது. 2.96.0Lu3Ossir (Interruptions) 1. ous Gossib (Time out)

இடையீடுகள் இரண்டு வகைப்படும். 1. ஓய்வு நேரங்கள், 2. மாற்றாட்டக்காரர்களை மாற்றுதல்.

(அ) நிலைப்பந்தாக (Dead Ball) பந்து மாறியவுடன்தான் சைகை மூலம் நடுவர் அல்லது துணை நடுவர் ஓய்வு நேரத்தை அளிப்பார். ஆட்ட இடைநேரத்தில் ஓய்வு தேவை என்று கேட்கின்ற குழுத் தலைவன் அல்லது பயிற்சியாளர் ஓய்வுக்காகவா (Rest) அல்லது மாற்றாட்டக்காரரை சேர்க்கவோ (Substitution) என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எதையும் குறிப்பிடாமல் இருந்தால், அது ஓய்வுக்காகவே என்று நடுவர் தீர்மானிப்பார்.

(ஆ) ஓய்வு நேர வேளையில் ஆடுகளத்தைவிட்டு வெளியே சென்று, அவர்கள் குழுவினர் அமர்ந்திருக்கும் பெஞ்ச் அருகில் செல்லலாம்.

(இ) ஒவ்வொரு முறை ஆட்டத்திலும், ஓய்வுக்காக 2 தடவை வாய்ப்புப் பெறலாம். ஓய்வுக்குரிய நேரமும் ஆள் மாறுதலுக்குரிய நேரமும் 30 விநாடிகளாகும்.

தவறுதலாக மூன்றாவது தடவை ஓய்வு நேரம் கேட்கின்ற குழுத் தலைவன் அல்லது பயிற்சியாளர் முதலில் மறுக்கப்பட்டு, எச்சரிக்கப்படுவார்.