பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 117

4. அடித்தெறிதல் (service)

(அ) ஆடுகளத்தின் பின் வரிசையில் உள்ளவர்களில் வலப்புறத்திலிருக்கும் ஒரு ஆட்டக்காரர், கையினாலாவது அல்லது கையில் ஒரு பகுதியினாலாவது பந்தை அடித்து (கையை விரித்தோ அல்லது மூடியோ) வலைக்கு மேலே செலுத்தி, எதிர்க் குழுவினரின்

பகுதியில் விழச் செய்து ஆட்டத்தைத் துவக்குகிற முறைக்கு அடித்தெறிதல் (Service) என்று பெயர்.

முதலாவது முறை ஆட்டத்திற்கும் 5-வது முறை ஆட்டத்திற்கும் முதலில் சர்வீஸ் போடுகிற வாய்ப்பு நாணயம் சுண்டுவதன் மூலமே முடிவெடுக்கப்படவேண்டும்.

அடித்தெறிவதற்காக அமைக்கப்பட்டஎல்லைக்குள் சென்றுதான் (Service Area) பந்தை அடித்தெறிய வேண்டும் என்பதில்லை. அப்படி ஒரு எல்லை அமைப்பும் இப்போது இல்லை. பந்தைக் கையால் பிடிக்காமலோ அல்லது உயரே எறிந்தோதான் அடித்தெறிய வேண்டும். மற்றொரு கையில் வைத்திருந்தபடியே பந்தை அடிக்கக் கூடாது.

பந்தை அடித்தெறிந்த பிறகு அடித்த ஆட்டக்காரர் கீழே விழ நேர்ந்தால் ஆடுகளப் பக்கத்திற்கு வெளியே அல்லது கடைக் கோட்டிற்கு வெளியேதான் விழலாம். உயரே எறியப்பட்ட பந்து, அடிக்கப்படாமல் கீழே விழுந்தால் மீண்டும் ஒருமுறை அடித்தெறிகின்ற வாய்ப்புக் கொடுக்கப்படும். ஆடும் எல்லையைக் குறிக்கும் (வலையின் இருபுறமுள்ள) இரு நாடாக்களுக்குமிடையில் வலையைத் தொடாமல் பந்து எதிர்ப் பக்கத்திற்குச் சென்றால்தான், அது சரியான அடித்தெறிதலாகும்.

(ஆ) தனது குழு தவறிழைத்து விட்டது (Fault) என்று நடுவர் கூறும் வரை, ஒரு அடித்தெறியும் ஆட்டக்காரர் தான் அடித் தெறிவதைத் தொடர்ந்து செய்யலாம். - 5. தவறான அடித்தெறிதல் (Wrong Service)

1. வலைக் கம்பின் மேல் பந்து படுதல். 2. வலைக்கு கீழாகப் பந்து செல்லுதல் 3. எதிர்க்குழுவினரின் பக்கத்திற்குச் செல்லுமுன், அடித் தெறியும் குழுவிலுள்ள ஆட்டக்காரரையாவது அல்லது வேறு எந்தப் பொருளையாவது பந்து தொடுதல்.

4. ஆடும் பரப்பிற்கு வெளியே அடித்தெறிதல். 5. ஆடுகள எல்லைக்கு வெளியே போய் பந்து விழுதல்