பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

20. 30 வினாடி நேரத்தை நீட்டித்து ஆட்டக்காலத்தை வீணாக்குதல்.

21. ஆட்டக்காரரை மாற்றுகின்ற ஒரு குழு 30 வினாடிக்கு மேலே எடுத்துக் கொண்டால், மற்றுமொரு ஓய்வு நேரத்தை அக்குழு கேட்டதாகவே நடுவர் குறித்துக் கொள்வார். அந்தக் குழு ஏற்கனவே 2ஓய்வு நேரத்தையும் எடுத்திருந்தால் அக்குழு அதனுடைய வெற்றி எண்ணையோ அல்லது அடித்தெறியும் வாய்ப்பையோ இழக்கும்.

22. கேட்டுக் கொண்டதன் பேரில், ஆட்டம் நிறுத்தப்படுகிற நேரத்தில், நடுவரின் அனுமதியின்றி ஆடுகளத்திற்கு வெளியே செல்லுதல் (முறை ஆட்டங்களுக்குப் பின்வரும் இடைவேளை நேரத்தைத் தவிர).

23. ஆட்ட நேரத்தில், எதிர்க்குழுவினரைக் காலால் எட்டி உதைத்தல், தேவையற்ற முறைகளில் சைகைகள் செய்து எதிர்க்குழுவினரைப் பயமுறுத்தல் - திரையிடுதல்.

24. முறையற்ற வழியில் தடுத்தாடுதலைச் செய்தல். மேலே கூறியுள்ள முறைகளில் இன்னும் கீழே கண்ட விதிகளிலும் அடித்தெறியும் குழு நடந்துகொண்டால் அடித் தெறியும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

1. அடித்தெறியும் நேரத்தில், கடைக்கோட்டைத் தொட்டோ அல்லது குறுக்கிட்டோ விடுதல்.

2. அவருடைய பாங்கர் (Team Mate) ஒருவர் உதவியில், தான் அடித்தெறிந்த பந்தை அடுத்தப் பகுதிக்குச் செல்ல விடுதல்.

3. அடித்தெறியும் நேரத்தில் சுற்றுமுறையை ஒழுங்காகச் செய்யாது இருந்திருத்தல்.

4. சரியான முறையில் அடித்தெறிதலைச்செய்யாமல் இருத்தல். 5. கடைக்கோட்டின் மீது கால் வைத்தபடி அடித்தெறிதலைச் செய்தல். வெற்றி எண்களும் - ஆட்ட முடிவும்

ஆட்டம் முழுவதும் தொடர் புள்ளி முறை (Rally Point System) கடைபிடிக்கப்படும். இரண்டு வெற்றி எண்கள் வித்தியாசம் இருக்கும்படி குறைந்தது 25 வெற்றி எண்களை எடுத்தே, ஒரு குழு

முறை ஆட்டத்தில் (Set) வெற்றிபெற வேண்டும். 5-ஆவது தீர்மானிக்கும் ஆட்டத்தில் (Deciding set) எந்த அணி 15 வெற்றி