பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 125

எண்கள் எடுக்கிறதோ அதுவே வெற்றி பெறும். 2 புள்ளிகள் வித்தியாசம் இருக்க வேண்டும். -

எதிராளி அடித்தெறிகின்ற பந்தைப் பெறுகின்ற ஒரு குழு, அதை வலைக்கு மேலே சரியான முறையில், எதிர்ப்பகுதிக்குள் அனுப்ப முடியாவிட்டால், எதிர்க்குழுவிற்கு அடித்தெறியும் வாய்ப்பு கிடைக்கும். -

ஆட வேண்டும் என்று நடுவர் கொடுத்த அறிவுரைக்குப் பிறகும், விளையாட மறுக்கின்ற ஒரு குழு, அந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும். அந்தப் போட்டி ஆட்டத்தின் முடிவு முறை ஆட்டத்தில் 15 - 0 என்றும், முடிவில் 3 - 0 என்றும் குறிப்பிடப்படும். -

குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேராத ஒரு குழு அந்த

ஆட்டத்தில் தோற்றதாக அறிவிக்கப்படும். 6 பேர்களுக்கும் குறைவாக ஒரு குழு ஆடுவதற்கு இருந்தாலும் அந்தக் குழுவும் (Incomplete) விதிக்குட்பட்டதாக அமையவில்லை என்று தோற்றதாக அறிவிக்கப்படும்.

7. ஆட்டக்காரர்களுக்கு அறிவுரை

1. ஒவ்வொரு ஆட்டக்காரரும் விதிகளை நன்றாக அறிந்து கொண்டு, அவைகளை சிறந்த முறையில் கடைபிடிக்க வேண்டும்.

2. ஆட்டநேரத்தில் ஏதாவது ஒரு கருத்தை நடுவரிடம் சொல்ல வேண்டுமென்று விரும்புகின்ற ஒரு ஆட்டக்காரர், தன்னுடைய குழுத் தலைவன் மூலமே சொல்ல வேண்டும். நடுவரிடத்தில் எடுத்துச் சொல்லவும், தன்னுடைய ஆட்டக்காரர்களிடத்தில் தொகுத்துச் சொல்லும் வாய்ப்பு பெற்ற இடை மனிதராக, குழுத் தலைவன் இருக்கிறார். தனது கடமைகள் என்றக் கட்டுக்கோப்புக்கு வெளியே செல்லாது அவர் நடுவரிடம் பேசலாம். ஒய்வு நேரம் கேட்பதற்கு அவர் துணை நடுவரிடமும் பேசலாம்.

3. விதிகளை மீறுகின்ற எல்லாக் குற்றங்களும் தண்டனையை பெறும். ஆட்டக்காரர்கள், பயிற்சியாளர்கள், மாற்றாட்டக்காரர்கள் கீழே காணும் குற்றங்களைச் செய்தால் கட்டாயமாகத் தண்டிக்கப் படுவார்கள்.

(அ) ஆட்ட அதிகாரிகள் (Official) எடுக்கின்ற எல்லா முடிவுகளுக்கும் பிடிவாதமாகக் கேள்விகளை எழுப்புதல்.

(ஆ) ஆட்ட அதிகாரிகளைப் பற்றி மனம் புண்படும்படிபேசுதல்.