பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

(இ) அவர்களின் முடிவுகள் பற்றி வெறுக்கத்தக்க முறையில் காரியங்களையும், செயல்களையும் செய்தல்.

(ஈ) வெறுக்கத்தக்க காரியங்களைச் செய்வதோடு அல்லது எதிராளிகளைப் பற்றியத் தனிப்பட்டக் குறைகளைச் செய்தல்.

(உ) ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்பொழுது, ஆடு களத்திற்கு வெளியேயிருந்து கொண்டு வேண்டுமென்றே வெளிப்படையாகக் குறிப்புரை (Coaching) வழங்குதல் போன்ற அனுமதிக்கப்படாத செயல்களைச் செய்தல்.

(ஊ) முறை ஆட்டங்கள் (Sets) ஓய்வு நேரம் இவற்றில் வரும் இடைவேளை நேரங்களில் நடுவரின் அனுமதியின்றி ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லலாம். அது அவர்களது அணிக்குரிய பெஞ்சு வரைதான் செல்லலாம்.

4. சிறிய தவறுகளைச்செய்தால் முதலில் எச்சரிக்கை கிடைக்கும். உதாரணமாக எதிராளிகளோடு, பார்வையாளர்களோடு

அல்லது ஆட்ட அதிகாரிகளோடு வாதிடுதல்.

ஆடுகளத்தினுள் இருக்கும்பொழுதே அநாவசியமாகக் கூச்சலிட்டு, ஆட்ட நேரத்தைத் தாமதப்படுத்துதல்.

இதே தவறுகளை மீண்டும் செய்தால், தனியாகப் பெறும் எச்சரிக்கை, குறிப்பேட்டில் குறிக்கப்படுவதோடு, அவருடைய குழு ஒரு வெற்றி எண்ணையோ அல்லது அடித்தெறியும் வாய்ப்பையோ இழக்கும்.

5. கடுமையான குற்றத்தைச் செய்தால் (Serious Fault) ஆட்டக் குறிப்பேட்டில் எச்சரிக்கைக் குறிக்கப்படும். இதன் பயனாக, அவருடைய குழு தானாகவே ஒரு வெற்றி எண்ணையோ அல்லது அடித்தெறியும் வாய்ப்பையோ இழக்கும். இதே குற்றத்தைத் தனி ஒருவர் மீண்டும் செய்தால், அந்த முறை ஆட்டத்திலிருந்து அவரை ஆடவிடாது நடுவர் விலக்கி வைத்து விடுவார். ==

ஆட்ட அதிகாரிகளை, எதிர்க்குழுவினரை அல்லது பார்வை யாளர்களை வெறுக்கத்தக்க முறையில் வெளிப்படையாகக் குறை சொல்லும் ஒரு ஆட்டக்காரர் எந்தவித எச்சரிக்கையுமின்றி ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார். குழுப் பொறுப்பாளர்கள்

குழுப் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் (Managers) ஆடுகின்ற குழுக்களின் குழுத் தலைவர்கள் எல்லோரும், அவருடைய