பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 127

குழுக்களின் ஒழுங்கான தரமான நடத்தைக்குப் பொறுப்பாளர்

களாவார்கள்.

ஓய்வுக்காகவும், மாற்றாட்டக்காரர்களை சேர்ப்பதற்காகவும், ஓய்வு நேரம் கேட்க, குழுப் பயிற்சியாளருக்கு உரிமையுண்டு. ஒய்வு நேரத்தின்பொழுது ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும் வரையில், ஆடு களத்தினுள்ளே நுழையாமல், ஆட்டக்காரர்களிடம் உரையாட அவருக்கு உரிமையுண்டு. ஆட்ட அதிகாரிகளிடம் ஏதாவது பேசுவதற்கு விளையாடுபவர்களில் குழுத் தலைவனுக்கு மட்டுமே உரிமையுண்டு.

8. ஆட்ட அதிகாரிகளின் கடமைகள்

ஒரு நடுவர், ஒரு துணை நடுவர், ஒரு வெற்றி எண் கணக்கர், இரண்டு கோடு காப்பாளர் எல்லோரும் ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகளாகப் பணியாற்றுவார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன், ஆடுவோரின் பெயர்களைப் பதிவு செய்தல், நாணயத்தைச் சுண்டுதல், சுற்று முறையின்படி ஆட்டக்காரர்களின் எண்ணை குறித்துக் கொள்ளுதல் முதலிய எல்லாவற்றையும், ஆடுகளத்திற்கு வெளியேயே முதலில் முடித்துக் கொள்ள வேண்டும். வெளியே நின்று கொண்டிருக்கும் ஆட்ட அதிகாரிகள், இரு குழுவிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் எல்லாம் அணியாக நின்று, ஆடுகளத்தை நோக்கி வர வேண்டும். ஆட்டக்காரர்கள் அவரவர்களுக்குரிய பகுதியின் கடைக்கோட்டின் மேல் வரிசையாக நிற்க வேண்டும். பின் உள்ளே வந்து, அவர்களுக்குள்ளேயே பயிற்சி செய்துகொள்ள 2 நிமிட நேரம் அவகாசம் தரப்படும். நேரம் முடிந்தவுடன் ஆட்டக்காரர்கள் அனைவரும் அவரவர்களுக்குரிய இடங்களில் நிற்க முன் மாதிரிப் பந்தாட்டம் (Trial Ball) எதுவும் இல்லாமல் உடனடியாக ஆட்டம் தொடங்கப்பெறும்.

நீண்ட ரப்பர் பையின் கழுத்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வாயுடைய பந்துகள் எப்பொழுதும் அபாயம் விளைவிக்கக் கூடியனவாக இருப்பதால், போட்டித் தொடர்களுக்கு, வாயற்ற பந்துகளே (Mouthiess Ball) மிகவும் பொருத்தமானவை யாகும். 1. BGsuit (Referee)

ஆட்டத்தை ஒழுங்குற நடத்துபவர் நடுவர் (Referee) அவரது

முடிவே முடிவானது. போட்டி ஆட்டத் தொடக்கத்திலிருந்து இறுதி வரைக்கும் ஆட்டக்காரர்களிடமிருந்து ஆட்ட அதிகாரிகள்