பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா . 11

1. ஆரம்ப நிலை உதை (Kick-of) ஆரம்பத்தில், நிலையாக வைக்கப்பட்டிருக்கும் பந்தை உதைத்து ஆட்டம் தொடங்கும் வரை, எல்லா ஆட்டக்காரர்களும் அவரவர் பகுதியில்தான் நின்று கொண்டிருக்க வேண்டும். - - -

2. அயலிடம் (or side) தன்னுடைய பகுதியில் நின்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர், எப்பொழுதும் அயலிடம் என்ற தவறுக்கு ஆளாக மாட்டார். : --

(ஈ) 10 கெச மைய வட்டமும் 10 கெச ஒறுநிலை வளைவுகளும்: நேர்முகத் தனி உதை (Direct Free-Kick) அல்லது மறைமுகத் தனி உதை எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவிதமான தனி உதைகளுக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும் 10 கெசதுரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும்.

அந்த உதையை எடுக்கும் வரை, எல்லோரும் பந்திலிருந்து 10 கெசத்திற்கு அதன் அருகில் வரக்கூடாது என்பதன் நோக்கம். தனியுதையில் எவ்விதத் தலையீடும் இடையீடும் அங்கே நிகழக் கூடாது என்பதற்காகத்தான். . . . . . -

குறிப்பு: எதிர்க்குழுவினர் எல்லோரும் பந்துக்கு முன்னும்

பின்னும்ioகெத்துத்திற்கு அப்பால்நிற்கவேண்டும் என்பதையே இந்த 10கெசவிதிவலியுறுத்துகின்றது.ஆனால் இந்த விதி இரண்டு

நிலைகளில் மாறுபடுகின்றது.

மாற்றம் ஒறுநிலை உதையானது (Penay Kick எடுக்கப் படும்பொழுது, உதைக்கும் ஆட்டக்காரர், தடுக்கும் இலக்குக் காவலர் இருவரையும் தவிர பந்து இருக்கும் இடத்திலிருந்து10கெசத்திற்கு

அப்பால், ஒறு நிலைப்பரப்பிற்கு வெளியே, எல்லோரும் நிற்க வேண்டும் என்பது பொது விதி. -

இலக்குக் காவலன் இலக்குக் கம்பங்களுக்கிடையில், கடைக்கோட்டின் மேல்தான் நிற்க வேண்டும். குறியுதை எடுக்கப் படும் பொழுது, எல்லா தாக்கும் ஆட்டக்காரர்களும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நிற்க வேண்டும். (இலக்குப் பரப்பின் கோட்டிற்கும், ஒறுநிலைப்பரப்பின் கோட்டிற்கும் இடையில் உள்ள தூரம் 12கெசங்களாகும்.) -

2. விதிவிலக்கு: ஒறுநிலைப் பரப்பினுள் 10 கெசத்திற்குள்ளாக மறைமுகத்தனியுதை வாய்ப்பு எதிர்க் குழுவினருக்கு கிடைத்தால், தடுக்கும் குழுவினர் எல்லோரும் இலக்குக் கம்பங்களுக்கிடையே உள்ள கடைக்கோட்டின் மேல் நின்று கொண்டிருக்க அனுமதிக்கப் படுவார்கள். -